கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு மாநில செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசனை குழுத் தலைவர் ராஜேந்திரன், நகரத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் தனசந்தானகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் தலைவர் பாமநாதம்பிள்ளை வரவேற்றார். நிகழ்ச்சியில் கொடியேற்றப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட, ஒன்றிய, சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து உறுப்பினர் அடையாளஅட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் அய்யப்பன், தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராஜா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE