சூலுார்:கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் நடந்த பயிற்சியில், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
காடாம்பாடியில், கனரா வங்கி சார்பில், மகளிருக்கு அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டதுகனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், மகளிர் மேம்பாட்டுக்கு என, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இம்மையம் சார்பில், சூலுார் வட்டாரம் காடாம்பாடி ஊராட்சியை சேர்ந்த, 31 பெண்களுக்கு அகர்பத்தி மற்றும்மூலிகை சாம்பிராணி தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், சோப், சோப் பவுடர் மற்றும் பினாயில் தயாரிப்பது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது.மகளிர் திட்டம் வாயிலாக வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து, மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் வீர காந்தா விளக்கினார்.
வங்கி கடன் திட்டங்கள் மற்றும் நிதி சார் கல்வி குறித்து செழியன் விளக்கினார்.பயிற்சி மையத்தின் இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி பேசுகையில், 'பெண்கள் மேம்பாட்டுக்காக பல பயிற்சிகள், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் வழங்கப்படுகின்றன,' என்றார்.பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தங்கராஜ், கண்ணையன், ராமசாமி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். பயிற்சி ஆசிரியர் கணேசன் நன்றி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE