பொது செய்தி

தமிழ்நாடு

இடைக்கால பட்ஜெட்டில் இதெல்லாம் வேணும்!அன்னூர் மக்கள் எதிர்பார்ப்பு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
அன்னுார்:சட்டசபையில் நாளை சமர்ப்பிக்கப்படும் இடைக்கால பட்ஜெட்டில், தங்களின் பல்லாண்டுகால கோரிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகுமா என அன்னுார் தாலுகா பகுதிகளைசேர்ந்த மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.கோவை வடக்கு தாலுகாவில் இருந்து பிரித்து, 2012ல் அன்னுாரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. உருவாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல கோரிக்கைகள்

அன்னுார்:சட்டசபையில் நாளை சமர்ப்பிக்கப்படும் இடைக்கால பட்ஜெட்டில், தங்களின் பல்லாண்டுகால கோரிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகுமா என அன்னுார் தாலுகா பகுதிகளைசேர்ந்த மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.கோவை வடக்கு தாலுகாவில் இருந்து பிரித்து, 2012ல் அன்னுாரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. உருவாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேறாமல் அன்னுார் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கடந்த, 2009 பிப்ரவரியில், கோவை, ஈரோடு மாவட்டங்களிலிருந்து, திருப்பூர் மாவட்டம் உருவானது. அப்போது அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள பொங்கலுார் ஊராட்சி திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. அந்த ஊராட்சியில் உள்ள பல கிராமங்கள் அன்னுார்- சத்தி சாலையில் உள்ளன.இந்த ஊராட்சிக்கு அடுத்து உள்ள ஆம்போதி ஊராட்சி, கோவை மாவட்டத்தில் உள்ளது. நடுவில் உள்ள பொங்கலுார் ஊராட்சி, திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்த ஊராட்சியை கோவை மாவட்டத்தில் சேர்க்க வேண்டுமென, 2009 முதல் பதினோரு ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர்.
கடந்த இரு சட்டசபை தேர்தல்களிலும் வேட்பாளர்களிடம் வலியுறுத்தி வந்தனர்.பொங்கலுார் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் விடிவு பிறக்கவில்லை. வரும் 23ம் தேதி இடைக்கால பட்ஜெட்டிலாவது பொங்கலுார் ஊராட்சிக்கு விடிவு பிறக்குமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அன்னுார் தாலுகாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நாளொன்றுக்கு, 350 ரூபாய் சம்பளத்துடன் பணிபுரியும் இவர்கள், வாடகையாக மட்டும் மாதம் சம்பளத்தில், 40 சதவீதத்தை செலவழிக்க வேண்டி உள்ளது.வெளியூர் தொழிலாளர்களுக்காக குறைந்த வாடகையில் குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது. தொழிலாளர் குடியிருப்பு குறித்து இந்த பட்ஜெட்டிலாவது அறிவிக்க வேண்டும். ஒன்றரை லட்சம் பேர் வசிக்கும் அன்னுார் அரசு மருத்துவமனையில் வெறும் 52 படுக்கைகள்தான் உள்ளன. போஸ்ட் மார்ட்டம் வசதி இல்லை. பெரிய அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இரவு டாக்டர்கள் இல்லை. ஸ்கேன் வசதி இல்லை. அன்னுார் அரசு மருத்துவமனையை, 100 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும் என ஐந்து ஆண்டுகளாக, அன்னுார் மக்கள் போராடி வருகின்றனர்.
பொன்னேகவுண்டன்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாகவும், எல்லப்பாளையம், பிள்ளையப்பம்பாளையம், செல்லப்பம்பாளையம் நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த வேண்டும்.அன்னுார் கிளை நூலகத்தை, தாலுகா நூலகமாக தரம் உயர்த்த வேண்டும். கோர்ட் அமைக்க வேண்டும்.
கிழக்கு மற்றும் மேற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும். அத்திக்கடவு திட்டத்தில், அன்னுார் தாலுகாவில் விடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குளங்களில் நீர் நிரப்ப இரண்டாம் திட்டத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், நிலுவையில் இருக்கின்றன.'நாளை சமர்ப்பிக்கப்படும் இடைக்கால பட்ஜெட்டில் தாலுக்காவுக்கு உட்பட்ட கிராம மக்களின் கோரிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்' என அன்னுார் மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X