கள்ளக்குறிச்சி : உலக தாய்மொழி தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முப்பெரும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜ், தாளாளர் குமார், முதல்வர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தனர். தமிழ்துறைத் தலைவர் பிரவீனா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் நாகராஜ் தாய்மொழி தினம் குறித்து பேசினார்.தொடர்ந்து அண்ணாமலை பல்கலை கழக பேராசிரியர் சிவபெருமான் எழுதிய 'உலக தாய்மொழி நாளில் தமிழை நேசிப்போம்' என்ற நுால் வெளியிடப்பட்டது. முன்னாள் மாணவர் ரஞ்சித் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், பிந்து, பாண்டியன், சித்ரா, தாமரைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.பிரசாந்த் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE