பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு: முதல்வர் பழனிசாமி., அடிக்கல்

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுக்கோட்டை: புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகளின், 100 ஆண்டு கால கனவுத் திட்டமான, காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, முதல்வர் பழனிசாமி., அடிக்கல் நாட்டினார்.100 ஆண்டு கனவுவெள்ள காலங்களில், காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை, கரூர் மாவட்டம், மாயனுார் தடுப்பணையில் இருந்து, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு, முதல்வர் பழனிசாமி., அடிக்கல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகளின், 100 ஆண்டு கால கனவுத் திட்டமான, காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, முதல்வர் பழனிசாமி., அடிக்கல் நாட்டினார்.


100 ஆண்டு கனவு

வெள்ள காலங்களில், காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை, கரூர் மாவட்டம், மாயனுார் தடுப்பணையில் இருந்து, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களின், வறண்ட பகுதிகள் வழியாக, குண்டாறு, வைகை ஆற்றுடன் இணைப்பதே இத்திட்டம்.

முதல் கட்டமாக, கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்.கரூர் மாவட்டத்தில், 48 கி.மீ., திருச்சி மாவட்டத்தில், 18.45 கி.மீ., புதுக்கோட்டை மாவட்டத்தில், 52 கி.மீ., என மொத்தம், 118.45 கி.மீ.,க்கு கால்வாய் வெட்டப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படும்.

இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், 220 ஏரிகளும், 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில், தெற்கு வெள்ளாற்றில் இருந்து, 109.695 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி, வைகையுடன் இணைக்கப்படும்.

மூன்றாவது கட்டமாக, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களில், 492 ஏரிகள் மற்றும் 44, ஆயிரத்து, 547 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும் வகையில், 34.045 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் வெட்டி, வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படும்.இத்திட்டம், மூன்று கட்டங்களாக, 14 ஆயிரத்து 400 கோடி ரூபாயில், 262 கி.மீ.,க்கு நிறைவேற்றப்பட உள்ளது. இதன்மூலம், 8.30 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.

வெள்ள காலங்களில் வீணாகும் தண்ணீர், ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால், தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர் தேவையும்நிறைவேற்றப்படும்.


அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்துார் பகுதியில், முதல் கட்டமாக, 6,941 கோடி ரூபாய் மதிப்பில், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டி, முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:நீர் மேலாண்மையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேட்டூர் அணை கட்டியதில் இருந்து, இதுவரை துார்வாரப்படாமல் இருந்த நிலையில், அதை இந்த ஆட்சியில் தான் துார்வாரி உள்ளோம்.

குடிமராமத்து எனும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டம், நமக்குக் கிடைக்கும் ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்காத வகையில், விவசாயிகள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. காவிரி நதி அசுத்தமாவதைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டம் குறித்து, பிரதமர் மோடியுடன் பேசினேன்.மிக அருமையான இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், ஜனாதிபதி உரையில் அத்திட்டத்தை இடம் பெறச் செய்துள்ளார். பிரதமருக்குநன்றி பாராட்டுகிறோம்.

கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தையும் இந்த அரசு நிறைவேற்றும்.ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், உங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா, நிறைவேற்றுமா என கேட்கிறார். இது, அவரது அறியாமையைக் காட்டுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.


ஸ்டாலினுக்கு சவால்

விழாவில், துணை முதல்வர்பன்னீர்செல்வம்., பேசியதாவது:நுாறு ஆண்டுகளில் செய்ய வேண்டிய, சாதனைகளையும், திட்டங்களையும், அ.தி.மு.க., அரசு, 10 ஆண்டுகளில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இந்த அரசின் திட்டங்கள் சேராத ஊர்களும் இல்லை. பயன் அடையாத மக்களும் இல்லை.ஆனால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அரசை தினந்தோறும் வசைபாடி வருகிறார். தி.மு.க., தமிழகத்தை ஆண்ட போதும், மத்தியில், 16 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியோடு ஆட்சியில் இருந்த போதும் என்ன செய்தனர்?

எந்தக் காலத்திலும் ஆட்சியை, அ.தி.மு.க.,விடம் இருந்து ஸ்டாலின் தட்டிப் பறிக்க முடியாது. அ.தி.மு.க., மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார். விழாவில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், நடராஜன், ராஜேந்திர பாலாஜி, பாஸ்கரன், வளர்மதி, ஓ.எஸ்.மணியன் மற்றும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்நாள் பொன் நாள்!

இணைப்பு திட்ட விழாவில் முதல்வர் பேசுகையில், ''இன்று என் வாழ்நாளில், பொன் நாளாக கருதுகிறேன். எத்தனையோ அரசு விழாக்களுக்கு சென்றிருந்தாலும், இந்த நதிகள் இணைப்பு திட்ட அற்புதமான விழாவில் கலந்து கொள்வதில், நான் பிறந்த பயனை அடைந்ததாக எண்ணும் அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறேன் அந்த அளவுக்கு எனக்கு இன்று மகிழ்ச்சியான பொன்நாள்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
22-பிப்-202119:42:46 IST Report Abuse
Vijay D Ratnam கருணாநிதி அடிக்கல் நாட்டாத திட்டம் எதாவது தமிழ்நாட்டில் உண்டா. கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் இருந்து கன்யாகுமரி கக்கூஸ் வரை அடிக்கல் நாட்டி இருப்பாரு. அடிக்கல் மட்டும் நாட்டுவாரு. மத்தபடி ஒரு செங்கல் கூட வராது. அவ்ளோதான். லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது இந்தியாவில் கோரிக்கை எழுப்பிய அனைத்து ரயில் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கினார். காசா பணமா ஒப்புதல்தானே. வாரி வழக்கிட்டு போய்ட்டாரு. அது மாதிரி. "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்ற திருக்குறளுக்கு ஏற்ப காலம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இடம் அந்த பொறுப்பு இடப்பட்டிருக்கிறது.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
22-பிப்-202119:35:35 IST Report Abuse
vbs manian இதையெல்லாம் முன்பே செய்திருக்க வேண்டும். தேர்தல் அவசரம். அவிநாசி அத்திக்கடவு இன்றைய தேதியில் முடிவுற்றிருக்க வேண்டும். பல தடுப்பணைகள் கட்டியிருக்கலாம். இலவச மாயையில் தூங்கி விட்டார்கள்.
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
22-பிப்-202116:59:55 IST Report Abuse
வந்தியதேவன் ஏய்யா.. உங்களுக்கு வெக்கமே இல்லையா...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X