ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம், ஒரகடம் என, ஐந்து இடங்களில், 'சிப்காட்' தொழிற் பூங்காக்கள் உள்ளன.
இவற்றில், 1,200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.இதில், 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் தொழிற்சாலைகள், அதில், 2 சதவீதத்தை, சி.எஸ்.ஆர்., எனும், தொழிற்சாலைகளின் சமூக பொறுப்புணர்வு நிதிக்கு ஒதுக்கி, சமூக பணிகளுக்கு செலவிட வேண்டும்.சி.எஸ்.ஆர்., நிதியை அனைத்து தொழிற்சாலைகளும், அந்தந்த தொழிற்சாலை அமைந்துள்ள கிராம பகுதிகளுக்கு முறையாக செலவிட்டால், ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள கிராமங்கள் முன்னேற்றம் அடைந்து இருக்கும்.
ஆனால், தொழிற்சாலைகள் அமைந்துள்ள, பல கிராமங்களில், அடிப்படை வசதிகூட இல்லாமல் இருப்பது, மக்களை வேதனைக்கு உள்ளாக்குகிறது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிப்காட்டின் சி.எஸ்.ஆர்., கொள்கையில் கூறப்பட்டுள்ளவற்றை தொழிற்சாலைகள் செய்திருந்தால், ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கும். ஆனால், தற்போது தொழிற்சாலைகள் அமைந்துள்ள கிராமங்களில், அடிப்படை வசதிகள்கூட இல்லாததை பார்க்கும்போது, சி.எஸ்.ஆர்., நிதி, முறையாக செலவிடப்படவில்லை என்பது தெரிகிறது.சில தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்களுக்கு நிதியை வழங்கி, கிராமப்புறங்களில் செலவிடுவதை போல் கணக்கு காட்டி, முறைகேடு செய்கின்றன.
மேலும், தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கும் நிலையில், சில கிராமங்களில் மட்டும், மீண்டும் மீண்டும் சி.எஸ்.ஆர்., நிதி செலவிடப்படுகிறது. இந்நிதியை கண்காணிக்க, தமிழகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒரு கல்லுாரி பேராசிரியர் என, மூன்று பேர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை முறையாக கண்காணிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
குழந்தைகளுக்கு இலவச உணவு மற்றும் கல்வியை வழங்க அங்கன்வாடி மையம் கட்டுவது ஆரம்ப சுகாதார நிலையத்தை நிர்மாணித்தல், மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவற்றை சுகாதாரப் பாதுகாப்புக்கு வழங்குதல் கழிப்பறைகள், வடிகால்கள், குடிநீர் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள், பம்ப் செட் அமைத்து குடிநீர் வழங்குதல் பள்ளி கட்டடங்கள், சுற்றுச்சுவர் போன்றவற்றை அமைத்து, கல்வியை ஊக்குவித்தல் இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த, திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை அமைத்தல் தொழிலாளர்கள் தங்க விடுதிகள், தங்குமிடங்கள் அமைத்தல் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கவும், சாலையின் இருபுறமும் மரங்களை நடவு செய்தல். மழை நீர் சேகரிப்பு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்துதல், நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துதல் கிராமங்களுக்கு பொது நுாலகங்களை அமைத்து கொடுத்தல் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் மற்றும் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல், விளையாட்டுகளுக்கான அரங்கங்கள் உருவாக்குதல் பிரதமரின் தேசிய நிவாரண நிதி அல்லது சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக மத்திய அரசு / மாநில அரசு அமைத்துள்ள வேறு எந்த நிதிக்கும் பங்களித்தல் தகுதியானவர்களுக்கு வீடுகள் அமைத்தல், சமுதாய மண்டபம், புதைகுழி, தகனக் கொட்டகை, சாலைகள் அமைத்து கொடுத்தல் போன்ற பணிகளை தொழிற்சாலைகள், சி.எஸ்.ஆர்., நிதியில் செய்து கொடுக்க வேண்டும்.சி.எஸ்.ஆர்., செலவினங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் பிரதி நிதிகளுடன், ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், சமீபத்தில் நடந்தது.அதில் பேசிய கலெக்டர் மகேஸ்வரி, 'தொழிற்சாலைகள், சமூக பொறுப்புணர்வுக்காக ஒதுக்கப்படும் நிதி, முறையாக செலவிட வேண்டும்' என, குறிப்பிட்டார்.எனவே, ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் அனைத்தும், சி.எஸ்.ஆர்., நிதிக்கு, என்னென்ன செலவு செய்யப்பட்டு உள்ளது என்பதை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE