தமிழ்நாடு

கவலை! திடீர் மழையால் நெல்கொள்முதல் நிலையங்கள் மூடல் ..... அறுவடை பாதிப்பால் விவசாயிகள்

Updated : பிப் 22, 2021 | Added : பிப் 21, 2021
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் பகுதியில் பெய்து வரும் திடீர் மழைக்கு, தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சம்பா அறுவடை பணிகள் பாதித்துள்ளன. பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், கோனுார், நரசிங்கமங்கலம், மாளிகைக்கோட்டம்,
கவலை! திடீர் மழையால் நெல்கொள்முதல் நிலையங்கள் மூடல் ..... அறுவடை பாதிப்பால் விவசாயிகள்

பெண்ணாடம் : பெண்ணாடம் பகுதியில் பெய்து வரும் திடீர் மழைக்கு, தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சம்பா அறுவடை பணிகள் பாதித்துள்ளன. பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், கோனுார், நரசிங்கமங்கலம், மாளிகைக்கோட்டம், சின்னக்கொசப்பள்ளம், துறையூர், இறையூர், முருகன்குடி, காரையூர், வெண்கரும்பூர், செம்பேரி, சவுந்திரசோழபுரம் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த மாதம் முதல் இயந்திரம் மூலம் அறுவடை பணிகள் துவங்கி, நடக்கிறது.நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், மாவட்ட முழுவதும் பல இடங்களில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டு, அறுவடை செய்த சம்பா நெல்லை விவசாயிகள் விற்று வருகின்றனர்

.ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையால் கொள்முதல் பணி மந்தமாக நடப்பதால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்நிலையில், பெண்ணாடம் மற்றும் கிராமங்களில் தொடர் மழை பெய்து வருதால் மாளிகைக்கோட்டம், வெண்கரும்பூர், நந்தப்பாடி, தாழநல்லுார், திருமலை அகரம், கிளிமங்கலம், பெண்ணாடம் பகுதிகளில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் நனைந்துள்ளன.இதனால் கொள்முதல் பணிகள் தற்காலிக நிறுத்தப்பட்டு, நிலையம் மூடப்பட்டதால் நெல் மூட்டைகள் அடுக்கியும், கொட்டியும் வைத்துள்ள விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் கவலை அடைந்துள்ளனர்.

தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து, நெல் கொள்முதல் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X