உத்திரமேரூர் : உத்திரமேரூர் பாப்பாங்குளத்திற்கு, மழை நீர் வரும் கால்வாய்களை துார்வாரி, சுற்றுச்சுவர் அமைப்பதோடு, நடைபயிற்சி மேற்கொள்ள குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க வேண்டும் என, சோமநாதபுரம் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, முதல் வார்டுக்கு உட்பட்ட சோமநாதபுரத்தில் உள்ள பாப்பாங்குளம், 30 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. நாளடைவில் கைவிடப்பட்ட இந்த குளத்தை, 2018 - 19ல், பேரூராட்சி நிர்வாகம் சீரமைத்தது. ஆனால், குளத்திற்கு நீர் வரும் மழை நீர் கால்வாயை, முழுமையாக துார்வாரவில்லை. இதனால், கடந்த ஆண்டு பெய்த பருவமழைக்கு, குளம் முழுமையாக நிரம்பவில்லை.
இது குறித்து, சோமநாதபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் கூறியதாவது:கடந்த ஆண்டு பருவ மழைக்கு, உத்திரமேரூர் ஏரி முழுமையாக நிரம்பி, கலங்கல் வழியே, உபரி நீர் வெளியேறியது. ஆனால், பாப்பாங்குளம் முழுமையாக நிரம்பவில்லை. எனவே, சோமநாதபுரத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் பாப்பாங்குளத்திற்கு, மழை நீர் வரும் கால்வாய்களை துார்வார வேண்டும்.குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து, நடைபாதை அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE