பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரகணங்கள் வழங்கப்பட்டது

Added : பிப் 21, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : கல்பாக்கம் சுற்றுப்புற பகுதி, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை, சென்னை அணுமின் நிலையம் துவக்கியது. கல்பாக்கத்தில் இயங்கும், சென்னை அணுமின் நிலையம், சமூக பொறுப்பு திட்டத்தில், சுற்றுப்புற பகுதிகளில், நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.2020 - 21ல்,

மாமல்லபுரம் : கல்பாக்கம் சுற்றுப்புற பகுதி, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை, சென்னை அணுமின் நிலையம் துவக்கியது.

கல்பாக்கத்தில் இயங்கும், சென்னை அணுமின் நிலையம், சமூக பொறுப்பு திட்டத்தில், சுற்றுப்புற பகுதிகளில், நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.2020 - 21ல், கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்டங்களில், நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்திற்கு, முக்கியத்துவம் அளிக்க, மத்திய பெருந்தொழில் துறை அமைச்சகம், தற்போது அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து, சுற்றுப்புற பகுதி, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், 40 லட்ச ரூபாய் மதிப்பிற்கு, மருத்துவ உபகரணங்கள் வழங்க, இந்நிலையம் திட்டம் துவக்கியது.

முதல்கட்டமாக, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதி அரசு மருத்துவமனைகள், சதுரங்கப்பட்டினம், கூவத்துார் பகுதி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில், ஆக்சிஜன் மற்றும் நெப்யூலைசர், முகமூடி, தொற்றுநீக்கி தெளிப்பான், முக கவசம், சானிடைசர், ஹேண்ட் வாஷ் ஆகியவற்றை, நிலைய இயக்குனர் எம்.ஸ்ரீனகவாஸ் வழங்கினார்.சமூக பொறுப்புக் குழு தலைவர், கே.வி.கிருஷ்ணமூர்த்தி, மனித வள துணை பொது மேலாளர், டி.வி.மாலதி கோபால், உறுப்பினர் செயலர், என்.சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X