நெய்வேலி, : என்.எல்.சி.,யின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது.
மத்திய மற்றும் மாநில அரசின் அறிவிப்பான முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியானது கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, அந்நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவியலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக நேற்று மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் டி.ஐ.ஜி., திக்விஜய் குமார் சிங் முதலில் தடுப்பூசியை போட்டுக்கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மற்ற வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொன்டனர்.ஏற்பாடுகளை என்.எல்.சி., நிறுவன சுகாதாரத்துறைஅதிகாரிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முனைவர் ஷேக் அப்துல்லா, சீனியர் கமாண்டர், சுஜய் குப்தா, துணை கமாண்டர் மற்றும் அதிகாரிகள், வீரர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE