சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் உலகத்தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டதுநிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக கல்வி வளர்ச்சி மைய இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார்.
இந்தியமொழிப்புல முதன்மையர் முத்துராமன் முன்னிலை வகித்தார். இதழியல் துறைத் தலைவர் வெங்கடேசன் வரவேற்றார்.தமிழ்மொழி பன்நெடுங்காலமாக வாழும் மொழி, தமிழ்ச் சான்றோர்கள் வளர்த்தமொழி. உயிரோடு வளர்ந்த இம்மொழி இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என்றால், அம்மொழியை நாம் கற்பதும், காப்பதும் நம் கடமை. மொழி நீண்ட நாள் வாழவும் வளரவும் நாம் செய்யவேண்டியது தமிழில் பெயர் சூட்டுதல் பிறமொழி கலக்காமல் பேசுவது என்று ஒவ்வொரு செயலிலும் தமிழ் தமிழ் என்று வாழ்ந்துகாட்டுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சரண்யா, ரவிச்சந்திரன், அருள், செல்வராஜ், துளசிராமன், மற்றும் சௌந்தர்ராஜன், ராதிகாராணி, தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அரங்க.பாரி, செந்தில்குமார், சதாசிவம், கணபதிராமன், அன்பில்நாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பேராசிரியர் பிலவேந்திரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE