பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரை மலையம்பாக்கத்தில் மனதை அள்ளும் கீரை வகைகள்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
குன்றத்துார் : குன்றத்துார் அருகே, பல ஏக்கர் பரப்பளவில், சிறு கீரை, அரைக்கீரை, பொன்னாங்கன்னி, முருங்கை உள்ளிட்ட கீரை வகைகள் மற்றும் கத்தரி, வெண்டை, அவரை போன்ற காய்கறி விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநகரை ஒட்டிய பகுதியில் நடக்கும் கீரை விவசாயம், சென்னை மற்றும் புறநகர் வாசிகளுக்கு வரப்பிரசாதமாவே அமைந்துள்ளது. குன்றத்துாரை அடுத்த, தெற்கு மலையம்பாக்கத்தில்,

குன்றத்துார் : குன்றத்துார் அருகே, பல ஏக்கர் பரப்பளவில், சிறு கீரை, அரைக்கீரை, பொன்னாங்கன்னி, முருங்கை உள்ளிட்ட கீரை வகைகள் மற்றும் கத்தரி, வெண்டை, அவரை போன்ற காய்கறி விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மாநகரை ஒட்டிய பகுதியில் நடக்கும் கீரை விவசாயம், சென்னை மற்றும் புறநகர் வாசிகளுக்கு வரப்பிரசாதமாவே அமைந்துள்ளது. குன்றத்துாரை அடுத்த, தெற்கு மலையம்பாக்கத்தில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டி, பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஒரு காலத்தில், அங்கு நெல் பயிரிட்டு வந்தனர்.காலப்போக்கில், தண்ணீர் பிரச்னையால், கீரை, காய்கறி விளைச்சலுக்கு மாறினர்.

இப்பகுதியில், இவ்வகை பயிர்கள் நன்கு வளர்வதாலும், வியாபாரிகள் அதிக அளவில் இவற்றை வாங்கிச் செல்வதாலும், பல ஆண்டுகளாக, இதையே பயிரிட்டு வருகின்றனர். இதனால், விவசாயிகள் மட்டுமின்றி, சிறு வியாபாரிகள் பலரும் பலனடைந்து வருகின்றனர். தற்போது, கிட்டத்தட்ட, 6 ஏக்கர் பரப்பளவில், சிறுகீரை, அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, நாட்டு பொன்னாங்கன்னி, சீமை பொன்னாங்கன்னி, முருங்கை, முள்ளங்கி, புளிச்சக்கீரை, கொம்பு காசினி கீரை, அகத்திக்கீரை, பாலக்கீரை, வெந்தயக்கீரை, பசலக்கீரை வகைகள் பயிரிடப்படுகின்றன. கத்தரி, வெண்டை, அவரை, சுைரக்காய், மிளகாய் போன்ற காய்கறி வகைகளையும் பயிரிட்டு, அறுவடை செய்து வருகின்றனர்.

இங்கு விளையும், கீரை மற்றும் காய்கறிகளை, சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சிறு வியாபாரிகள் மொத்தமாக வாங்கி, விற்பனை செய்கின்றனர். பொதுமக்களும், நேரிடையாக வந்து, விரும்பி வாங்கி செல்கின்றனர். அதே நேரத்தில், பல ஏக்கர் பரப்பளவில், பச்சையாக காணப்படும், கீரை விளைச்சல், வெளிவட்ட சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கும் விருந்து படைக்கிறது. இது குறித்து, விவசாயி பி. தீனதயாளன், 48, கூறியதாவது: காலம், காலமாக கீரை, காய்கறி விளைச்சல் செய்து வருகிறோம். இங்கு விளையும் கீரை வகைகளில், கொம்பு காசினி, பாலக் கீரைகள், நீரிழிவு நோய்க்கு சிறந்தது.

இங்கு விளைச்சல் செய்யப்படும் கீரை, காய்கறிகளை, சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி, விற்பனை செய்கின்றனர். தாம்பரம் மார்க்கெட்டுக்கும் சப்ளை செய்கிறோம். பொதுமக்கள் பலர், நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். இயற்கை உரம் பயன்படுத்தி விளைச்சல் செய்கிறோம். விலை மிகக் குறைவு; நன்மைகள் ஏராளம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X