பொது செய்தி

தமிழ்நாடு

நுாலக நுழைவாயிலில் கடைகளை அகற்ற கோரிக்கை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
தாம்பரம் : நுாலக நுழைவாயிலில் உள்ள, கடைகளை அகற்ற, வாசகர் வட்டத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட, மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில், 1957ல் கிளை நுாலகம் துவங்கப்பட்டது.2008ல், முழு நேர நுாலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், 58 ஆயிரம் நுால்கள் உள்ளன; 6,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இணையதள வசதியும் உள்ளது. இந்நுாலகத்திற்கு, 85 லட்சம் ரூபாய் செலவில்,

தாம்பரம் : நுாலக நுழைவாயிலில் உள்ள, கடைகளை அகற்ற, வாசகர் வட்டத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட, மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில், 1957ல் கிளை நுாலகம் துவங்கப்பட்டது.2008ல், முழு நேர நுாலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், 58 ஆயிரம் நுால்கள் உள்ளன; 6,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இணையதள வசதியும் உள்ளது. இந்நுாலகத்திற்கு, 85 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கட்டடம் கட்டப்பட்டு, கடந்த மாதம், 28ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது, நுாலக நுழைவாயிலை ஒட்டி, ஆக்கிரமிப்பு கடைகள் முளைக்காத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, நுாலக நுழைவாயிலின் இருபுறங்களிலும், இரு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்தும் வகையில், கம்பிகள் அமைக்கப்பட்டன. தற்போது, தெருவோர வியாபாரிகள், கடைகள் அமைத்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.இது குறித்து, நகராட்சியின் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'நுாலகத்தை ஒட்டி, கடை அமைத்துள்ளவர்கள், தெருவோர கடை வியாபாரிகள் சங்கத்தில், அடையாள அட்டை பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர். விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பதே, வாசகர்கள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X