கோவிலம்பாக்கம் : சின்ன கோவிலம்பாக்கத்தில், மழை நீர் நிரம்பியுள்ள, கங்கை அம்மன் கோவில் குளம், பராமரிப்பின்றி, குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இந்தக் குளத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, மடிப்பாக்கம் அடுத்துள்ள சின்ன கோவிலம்பாக்கத்தில், ஊராட்சியின் கட்டுப்பாட்டில், கங்கை அம்மன் கோவில் உள்ளது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவில், அக்கோவிலுக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது.முன்பு நன்மங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், போக்கு கால்வாய் வழியாக, இக்குளத்தில் சேகரமாகி, அப்பகுதி விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில், போக்கு கால்வாயும், அக்குளத்தின் கரைகளும், ஆக்கிரமிப்பாளர் களால் கபளீகரம் செய்யப்பட்டு சுருங்கியது.
தற்போது, இந்த குளமும் பாராமரிப்பின்றி கிடக்கிறது. சுற்றுவட்டார பகுதியினர், குளத்தில் குப்பை கொட்டி வருகின்றனர். இந்நிலையில், தொடர் மழையால் குளம் நிரம்பி பாதுகாப்பற்று காணப்படுகிறது. எனவே, இக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, நவீன முறையில் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE