மைசூரு : கேரளாவில் கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரிப்பதால், கேரளா -- மைசூரு மாவட்ட எல்லைப்பகுதிகளில், 'ஹை அலர்ட்' உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வரும், அனைத்து பயணியரையும் பரிசோதனைக்கு உட்படுத்த, மைசூரு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கேரளாவில் குறைந்திருந்த கொரோனா தொற்று, தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே, கேரளாவை ஒட்டியுள்ள மைசூரு மாவட்ட நிர்வாகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது; கேரள எல்லைப்பகுதிகளில், கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. அங்கிருந்து வரும் ஒவ்வொருவரும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். எல்லைப் பகுதியான, எச்.டி.கோட்டை தாலுகாவின் பாவலி சோதனைச்சாவடியில், சுகாதாரத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் கேரளாவிலிருந்து, மைசூரு மாவட்டத்துக்குள் நுழையும் பயணியருக்கு, உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, கிருமி நாசினி வசதி செய்வது போன்றவற்றை சுகாதார ஊழியர்கள் செய்கின்றனர்.கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள், பரிசோதனை செய்யப்படுகிறது. மைசூரு -- கேரளா இடையே, ஒரு விமானம் இயங்குகிறது. பஸ்கள் மட்டுமின்றி, விமானத்தில் வரும் பயணியரும், கண்காணிக்கப்படுகின்றனர்.சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா தொற்று பரவாமல், மைசூரு மாவட்ட நிர்வாகம், சுதாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.பொது இடங்கள், நிகழ்ச்சிகளில், கூட்டம் சேராமல், சமூக விலகலை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். அப்போது தான் கொரோனாவிலிருந்து, தற்காத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE