பொது செய்தி

இந்தியா

மெட்ரோ பணிகளுக்கு தொந்தரவு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'பெங்களூரில், ஆண்டு தோறும் நடக்கும், முக்கியமான சாலைகளின் அபிவிருத்தி பணிகள், எதிர்க்காலத்தில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு தொந்தரவாக இருக்கும்' என, அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பெங்களூரின் பெரும்பாலான சாலைகள், குறிப்பாக மெட்ரோ பாதை கடந்து செல்லும் சாலைகள், எப்போதும் தரமாக இருக்கும். ஏனென்றால் அந்த சாலைகள், கால காலத்துக்கு, பழுது

பெங்களூரு : 'பெங்களூரில், ஆண்டு தோறும் நடக்கும், முக்கியமான சாலைகளின் அபிவிருத்தி பணிகள், எதிர்க்காலத்தில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு தொந்தரவாக இருக்கும்' என, அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெங்களூரின் பெரும்பாலான சாலைகள், குறிப்பாக மெட்ரோ பாதை கடந்து செல்லும் சாலைகள், எப்போதும் தரமாக இருக்கும். ஏனென்றால் அந்த சாலைகள், கால காலத்துக்கு, பழுது பார்க்கப்படுகின்றன.இதனால் சாலைகளின் உயரம் அதிகரித்தபடி செல்கிறது. இது இப்படியே தொடர்ந்தால், எதிர்க்காலத்தில் சரக்கு சுமந்து வரும் வாகனங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களை, கடந்து செல்வதில் பிரச்னை ஏற்படலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பி.எம்.ஆர்.சி.எல்., எனும், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பொறியாளர் ஒருவர் கூறியதாவது:சாலைகளில் தார் பூசுவதில் தவறல்ல. பொதுவாக ஒப்பந்ததாரர்கள், ஏற்கனவே இருக்கும் தார் சாலை மீதே, அவ்வப்போது தார் பூசுகின்றனர். பொறியாளர்கள் தெரிவித்த தகவலின்படி, மூன்று முதல் நான்கு செ.மீ., தார் போடப்படுகிறது. இதனால் ஆண்டு தோறும், சாலைகளின் உயரம் அதிகரிக்கிறது. இது பிரச்னையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. சரக்கு சுமந்த வாகனங்கள், மெட்ரோ நிலையங்களை, கடந்து செல்வது கஷ்மாக இருக்கும். சாலைகளை தரமாக நிர்வகிப்பது அவசியம். இல்லையென்றால், எதிர்க்காலத்தில் மெட்ரோ பணிகளுக்கு, தொந்தரவு ஏற்படக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு மாநகராட்சி தலைமை பொறியாளர் பிரஹலாத் கூறியதாவது:சாலைகளின் அபிவிருத்தி பணிகளால், எதிர் காலத்தில் மெட்ரோ பணிகளுக்கு, எந்த பிரச்னையும் ஏற்படாது. ஏனென்றால் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில், ஒருமுறை தார் பூசினால், மூன்று ஆண்டுகளுக்கு தார் பூசப்படாது. எனவே, சாலை அரை மீட்டர் உயரமாகவே பல ஆண்டுகளாகும்.தற்போது நகரில் உள்ள சாலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், 1970 -- 1980களில் அமைக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில், தார் பெயர்ந்தால், தார் பூசும் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்து, நிரந்தரமாக ஒயிட் டாப்பிங் நடைமுறை செயல்படுத்தப்படும்.சமீபத்தில், டிரினிடி சதுக்க மெட்ரோ ரயில் நிலையத்தில், சரக்கு கொண்டு சென்ற லாரி, சாலையில் சிக்கிக்கொண்டது. ஆனால் அந்த சாலை, 2017ல் தார் பூசப்பட்டது. அது தற்செயலான சம்பவம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X