உடுமலை:மாற்றுத்திறனாளிகள் தனியார் வேலை வாய்ப்பு முகாமில், தேர்வானவர்களுக்கு, உடனடியாக நியமன ஆணை வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை, கலெக்டர் விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸாண்டர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கான அரசு திட்டங்கள், வேலை வாய்ப்பு உதவிகள் குறித்து பேசினர்.படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளிகள் என, 220க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 'பயோடேட்டா' விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். மாற்றுத்திறனாளிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் விண்ணப்பித்தனர். நேர்காணலில் பங்கேற்றவர்களில், தகுதியானவர்களுக்கு வேலை நியமன உத்தரவை கலெக்டர் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE