பொது செய்தி

தமிழ்நாடு

தபால்துறை முகவராக வாய்ப்பு: நாளை நேர்காணல் நடக்குது

Added : பிப் 21, 2021
Share
Advertisement
உடுமலை:திருப்பூர் தபால் கோட்டத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தின் கீழ், நேரடி முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு காத்திருக்கிறது.இது குறித்து, தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கலைசெல்வி அறிக்கை:ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், மகிளா மண்டல் பணியாளர்கள், சுயதொழில்

உடுமலை:திருப்பூர் தபால் கோட்டத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தின் கீழ், நேரடி முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு காத்திருக்கிறது.இது குறித்து, தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கலைசெல்வி அறிக்கை:ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், மகிளா மண்டல் பணியாளர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், 18 முதல், 50 வயதுடையவர்கள் அனைவரும் முகவராக தகுதியுடையவர்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள் எனில், 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான நேர்காணல் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் நாளை (23ம் தேதி) காலை, 10:00 மணியளவில் நடக்கிறது. வயதுச்சான்றிதழ், கல்விச்சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 'பயோடேட்டா' விவரங்களுடன் பங்கேற்கலாம்.சம்பளம் இல்லை. பாலிசி பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். தேர்வு பெறும் நேரடி முகவர்கள், கள அலுவலர்கள், திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் பணிபுரிய வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X