பொது செய்தி

இந்தியா

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'கொரோனா இரண்டாவது அலை எழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கர்நாடகாவின் விருந்தினர் இல்லங்கள், நிகழ்ச்சிகள் நடக்கும் ஓட்டல்கள், திருமண மண்டபங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில், உணவு சப்ளை செய்யும் மையங்களை மூட வேண்டும்' என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.சுகாதாரத்துறை வெளியிட்ட சுற்றற்றிக்கையில்

பெங்களூரு : 'கொரோனா இரண்டாவது அலை எழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கர்நாடகாவின் விருந்தினர் இல்லங்கள், நிகழ்ச்சிகள் நடக்கும் ஓட்டல்கள், திருமண மண்டபங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களில், உணவு சப்ளை செய்யும் மையங்களை மூட வேண்டும்' என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.சுகாதாரத்துறை வெளியிட்ட சுற்றற்றிக்கையில் கூறியுள்ளதாவது:திருமணம், அரசியல் கூட்டங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு, சமையல் செய்து கொடுப்பவர்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரென்ட்கள், தாபாக்களில் பணியாற்றுவோர், கொரோனா பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.உணவு தயாரிப்போர், உணவு பரிமாரும் ஊழியர்கள், குறைந்தபட்சம், 6 அடி சமூக விலகலை பின்பற்றி, பணியாற்ற வேண்டும். கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும்.

கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவ வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்துவதை, பழக்கமாக்க வேண்டும்.இருமும் போது, தும்மும் போது மூக்கு, வாயை கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால், மூடிக்கொள்ள வேண்டும். திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டால், உடனடியாக டாக்டர்களிடம் சென்று, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.உணவு சமைக்கும் போது, பரிமாறும் போது கையுறை பயன்படுத்த வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டும், பணிக்கு ஆஜராக அனுமதியளிக்க வேண்டும். அவர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி கொடுப்பதுடன், அவர்கள் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.சிற்றுண்டி, உணவருந்தி வீசியெறியக் கூடிய தட்டு, தம்ளர், ஸ்பூன்களை முறையாக அழிக்க வேண்டும். சாப்பிடும் அறைகளில் இயற்கையான காற்று, வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கை கழுவும் இடம், கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.விருந்தினர் அமர்ந்து உணவருந்தும், இருக்கைகள், மேஜைகள், கதவுகள், தரையை தினமும் கிருமி நாசினியால், சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X