பொது செய்தி

தமிழ்நாடு

சாலை சேதமடைவதை தடுக்க 'சிலாப்' பதித்து, நடைபாதை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
கிண்டி : கிண்டி, சிட்கோ வளாகத் தெருக்களில், சாலையை சேதப்படுத்தாமல் கேபிள் பதிக்க, 'சிலாப்' பதித்து, நடைபாதை அமைக்கப்படுகிறது. அடையாறு மண்டலம், 170வது வார்டுக்கு உட்பட்ட சிட்கோ வளாகம், 404 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 83 தெருக்கள் உள்ளன. இந்த சாலை, 14.4 கி.மீ., நீளம் கொண்டது. இங்கு, 600க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன.இந்த பகுதி, மாநகராட்சி எல்லையில் இருந்தாலும்,

கிண்டி : கிண்டி, சிட்கோ வளாகத் தெருக்களில், சாலையை சேதப்படுத்தாமல் கேபிள் பதிக்க, 'சிலாப்' பதித்து, நடைபாதை அமைக்கப்படுகிறது.

அடையாறு மண்டலம், 170வது வார்டுக்கு உட்பட்ட சிட்கோ வளாகம், 404 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 83 தெருக்கள் உள்ளன. இந்த சாலை, 14.4 கி.மீ., நீளம் கொண்டது. இங்கு, 600க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன.இந்த பகுதி, மாநகராட்சி எல்லையில் இருந்தாலும், துப்புரவு, சுகாதாரம், சாலை பராமரிப்பு, தெரு விளக்கு உள்ளிட்ட பணிகளை, சிட்கோ நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இங்குள்ள, முக்கிய சாலைகளை சேதப்படுத்தாமல், எளிதாக கேபிள் பதிக்கும் வசதி கொண்ட, நடைபாதை அமைக்க, சிட்கோ நிர்வாகம் முடிவு செய்தது.

மொத்தம், 50 லட்சம் ரூபாய் செலவில், 2 கி.மீ., நீளம், 5 அடி அகலத்தில், ஒன்றரை அடி உயரம் கொண்ட, 'சிலாப்' நடைபாதை அமைக்கப்படுகிறது. சிலாப்பை எடுத்து, தொலைத்தொடர்பு, மின் கேபிள்களை பூமிக்கடியில் பதிக்கும் வகையில், நடைபாதை அமைக்கப்படுகிறது. இதனால், பள்ளம் தோண்டுவதும், சாலை, நடைபாதை சேதம் அடைவதும் தடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X