உடுமலை:தமிழகத்தின் பல மாவட்டங்களில், பெரும்பாலான அரசுப்பள்ளிகளில், நுாறு சதவீத அளவில் மாணவர்கள் எண்ணிக்கை பூர்த்தியாகி வருகிறது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. ஊழியர்கள் பலர் வேலையை இழந்தனர். தொழில் சார்ந்த மக்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கினர். தற்போது, இயல்பு நிலை நோக்கி, மீண்டும் தொழில்கள் மேம்பட்டு வருகின்றன.அதேநேரம், 2020 - 21ம் கல்வியாண்டில், அரசுப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வளர்ச்சி கண்டுள்ளன. நகரங்களில், தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர் பலரும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழகத்தின், பல மாவட்டங்களில், பெரும்பாலான அரசுப்பள்ளிகளில், நுாறு சதவீத அளவில் மாணவர்கள் எண்ணிக்கையை காண முடிகிறது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:வேலை இழப்பின் காரணமாக, பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலை; அரசுப்பள்ளிகளில் சேர்க்கையுடன் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்; 'ஆன்லைன்' கற்றலில் கல்விக் கட்டணத்தை மிச்சப்படுத்தலாம் போன்ற பல காரணங்களால், பலரும் அரசுப்பள்ளிகளை நாடுகின்றனர்.தற்போது, அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள், பெற்றோர்கள் இடையே வரவேற்பை பெறச்செய்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டட அமைப்புகள், கம்ப்யூட்டர் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை பெற்றோர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. இதனால், அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE