குடகு : மடிகேரியில் இரு கிராமங்களில், அடுத்தடுத்து இரண்டு நாட்களில், 60 வயது மூதாட்டி மற்றும், 14 வயது சிறுவனை புலி தாக்கி கொன்றதால், புலியை பிடிக்க, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
குடகு மாவட்டம், மடிகேரி, கும்டுரு கிராமத்தை சேர்ந்த, அய்யப்பா, 14, இரவு வெளியே வந்தவரை, புலி தாக்கி கொன்றது. அதுபோல, டி.ஷெட்டிகேரியில், அலமேடா சோமண்ணா என்பவரின் எஸ்டேட்டில் பணியாற்றி வந்தவர் சென்னி, 60. இவர், எஸ்டேட்டிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார்.நேற்று காலை, 6:50 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்த அவரை, புதரில் மறைந்திருந்த புலி, அவரின் கழுத்தில் கடித்து கொன்றது.சத்தம் கேட்டு வெளியே வந்த சென்னியின் உறவினர், கூச்சலிட்டதால் புலி தப்பியோடியது. இதையறிந்த எஸ்டேட் உரிமையாளர், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.அடுத்தடுத்து இருவரை புலி கொன்றதால், இவ்விரு கிராமத்தினரும் அச்சமடைந்து, விராஜ்பேட்டை வன அதிகாரி சக்ரபாணி வர வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவரால் அங்கு செல்ல முடியவில்லை.இதையடுத்து நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவிடப்பட்டது. இதனால், அபிமன்யு, கோபாலசுவாமி ஆகிய இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE