வேளச்சேரி : வேளச்சேரி ரயில்வே சாலையில், சமூக விரோதிகள் குப்பை கொட்டுவதும், அவற்றை, போதை ஆசாமிகள், தீ வைத்து எரிப்பதும் அதிகரித்துள்ளது.வேளச்சேரி- - பெருங்குடி ரயில்வே சாலை, 80 அடி அகலம் கொண்டது;
இந்த சாலை, 179வது வார்டை ஒட்டி உள்ளது. பணி முழுமை பெறாததால், போக்குவரத்துக்கு இன்னும் திறக்கப்படவில்லை.இந்த சாலையில், கட்டட கழிவுகள், எளிதில் தீ பிடிக்கும் குப்பை, வீட்டு பயன்பாட்டு கழிவுகள், தொழில் நிறுவன கழிவுகள் கொட்டப்படுகின்றன. இரவு நேரத்தில், இப்பகுதியில் அதிக அளவில் குப்பை கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மறைவான பகுதியாக இருப்பதால், இரவு நேரங்களில், போதை ஆசாமிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
சிலர், போதையில் குப்பைக்கு தீ வைப்பதால், அப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.சமூக விரோதிகளின் பொறுப்பற்ற செயலால், காற்று மாசடைவதுடன், பெரும் தீ விபத்தை ஏற்படுத்தும் அபாயம் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, ரயில்வே சாலையில் குப்பையை அகற்றுவதோடு, அப்பகுதி மீண்டும் குப்பை காடாக மாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE