பொது செய்தி

தமிழ்நாடு

வெயிலுக்கு தர்பூசணி பழம் விற்பனை விறுவிறு! கிலோ ரூ.30க்கு விற்பனை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், தர்பூசணி பழ வியாபாரம் சூடுபிடித்து, கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கோடை காலங்களில், மக்கள் பல்வேறு பழங்களை உண்டு, குளிர்ச்சியைத் தேடிக்கொள்வார்கள். இந்த வகையில், குளிர்ச்சியோடு சுவையையும் வழங்கும் தர்பூசணி பழத்திற்கு தனி இடம் உண்டு.கோடை தொடங்குவதை அறிவிப்பதை போல, தர்பூசணி பழக்கடைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற
 வெயிலுக்கு தர்பூசணி பழம் விற்பனை விறுவிறு! கிலோ ரூ.30க்கு விற்பனை

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், தர்பூசணி பழ வியாபாரம் சூடுபிடித்து, கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கோடை காலங்களில், மக்கள் பல்வேறு பழங்களை உண்டு, குளிர்ச்சியைத் தேடிக்கொள்வார்கள். இந்த வகையில், குளிர்ச்சியோடு சுவையையும் வழங்கும் தர்பூசணி பழத்திற்கு தனி இடம் உண்டு.கோடை தொடங்குவதை அறிவிப்பதை போல, தர்பூசணி பழக்கடைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில், விலை குறைவாகவும் அனைவரும் விரும்பும் பழமாக இது உள்ளது.தற்போது மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் தொடங்கி, உடுமலை வரை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கடைகளில், இப்பழங்கள் அடுக்கியும், குவித்தும் வைக்கப்பட்டு மக்கள் கவனத்தை ஈர்க்கிறது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில், விலை சிறிது கூடுதலாக இருந்தாலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு பிப்., தொடக்கத்தில் கிலோ, 15 ரூபாயிலிருந்து, 20 ரூபாய் வரையும், அதற்கு பின்பு வரத்து அதிகரித்த போது, மே மாதங்களில் கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது, 30 ரூபாய் என்பது சற்று கூடுதலாக உள்ளது. விலை குறைய எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
இதுகுறித்து பழ விற்பனையாளர் கூறியதாவது:வெளி மாநிலங்களிலிருந்து, தற்போது வாங்கி வியாபாரம் செய்கிறோம். அங்கிருந்து எடுத்து வரும் லாரி வாடகை சற்று அதிகமாக உள்ளது. இதனால், தர்பூசணி பழங்கள் ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து, பழங்கள் வரத்து தொடங்கினால், விலை குறைந்துவிடும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X