பொது செய்தி

தமிழ்நாடு

கோடையில் பால் உற்பத்தி பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைக்கு அறிவுறுத்தல்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
உடுமலை:கோடைக்காலங்களில் பால் உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் அதிகளவு வெப்பத்தினால் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, பசுந்தீவன பற்றாக்குறை, கடுமையான வெப்ப நிலை, பராமரிப்பு

உடுமலை:கோடைக்காலங்களில் பால் உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் அதிகளவு வெப்பத்தினால் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, பசுந்தீவன பற்றாக்குறை, கடுமையான வெப்ப நிலை, பராமரிப்பு முறை போன்றவற்றால் கறவை மாடுகளில், பால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தவிர, வறட்சியால் ஏற்படும் பசுந்தீவன குறைபாடு, பால் உற்பத்தி குறைவதற்கு முக்கிய காரணமாகவும் உள்ளது.அதேபோல், ஈக்களின் பெருக்கம் அதிகமாகி, வட்டமிடுதல், கால்நடைகளின் உடலில் உட்கார்ந்து தொல்லை கொடுத்தல் போன்றவற்றால் கறவை மாடுகள் அமைதியற்ற சூழ்நிலையில் இருக்கும். இதன் காரணமாகவும் பால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர், பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, முறையான தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால், இத்தகைய பிரச்னைகளை தவிர்க்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:ஈக்களைக் கட்டுப்படுத்த மருந்து தெளிக்கலாம். மாட்டுத் தொழுவம் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பசுந்தீவனம் தவறாமல் கொடுக்கும் போது, பால் உற்பத்தி பாதிக்கப்படுவது தடுக்கப்படும். காய்ந்த புல் மற்றும் குழிப்புல் ஆகியவற்றோடு, அடர் தீவனங்களையும் கறவை மாடுகளின் உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பாக,4 அல்லது, 5 முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.கறவை மாடுகள், தண்ணீர் தேவையை மூன்றில் இரண்டு பங்கினை பகல் நேரங்களில் மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனவே, கறவை மாடுகளின் தண்ணீர் தேவையை முறையாக கண்காணிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் போது கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.இவ்வாறு, கால்நடை துறையினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X