உடுமலை:மாநில அளவிலான சிலம்ப போட்டியில், வெற்றி பெற்ற, மாணவ, மாணவியருக்கு, பாராட்டு விழா உடுமலையில் நடந்தது.உடுமலை கிளை நூலகம் எண்-2 நூலக வாசகர் வட்டம் பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, இலவச சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுபவர்கள், தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கம் வேலுாரில், நடத்திய மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.நெடுங்கம்பு, நடுக்கம்பு, சுவடு முறை மற்றும் தொடும் முறை ஆகிய பிரிவில், போட்டிகள் நடந்தது. இப்போட்டியில், உடுமலையை சேர்ந்த, 26, மாணவ மாணவியர், வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பாராட்டு விழா உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவகுமார் தலைமை வைத்தார். நூலகர் கணேசன் வரவேற்றார் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க செயலாளர் சக்திவேல், லியாகத் அலிகான், உடுமலை டி.எஸ்.பி., ரவிக்குமார் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். சிலம்ப ஆசான் வீரமணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE