பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டை, சுந்தரேசனார் கோவில் குளக்கரையில் உள்ளது, கிளை நுாலகம்.இந்த நுாலகத்தில், ஏராளமானோர் உறுப்பினர்களாகவும், புரவலர்களாகவும் உள்ளனர்.
இது தவிர, தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், நுாலகத்திற்கு வந்து, தினசரி நாளேடுகளை வாசிக்கின்றனர்.கோவில் குளக்கரையில், அமைதியான சூழலில், நுாலகம் அமைந்துள்ளது, வாசகர்களின் வருகை அதிகரிப்பதற்கான மறைமுக காரணம்.இந்நிலையில், நுாலக கட்டடத்தின் தளம் உருக்குலைந்து, கான்கிரீட் வலுவிழந்து வருகிறது. இதனால், வாசகர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.நிம்மதியாக வாசிக்கும் படியாக, நுாலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE