சித்ரதுர்கா : "பாதாமி தொகுதியில், வாக்காளர்கள் என்னை தோற்கடிக்கவில்லை. பா.ஜ., தலைவர்களே என்னை தோற்கடித்தனர்," என, சமூக நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
சித்ரதுர்காவில், நேற்று அவர் கூறியதாவது:முந்தைய சட்டசபை தேர்தலில், பாதாமி தொகுதியில் வாக்காளர்கள் என்னை தோற்கடிக்கவில்லை. வால்மீகி சமுதாயத்தின், ஸ்ரீராமுலு வெற்றி பெற்றால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி, பா.ஜ., தலைவர்களே, என்னை தோற்கடித்தனர்.பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷ போன்ற பெரிய தலைவர்கள் மட்டும், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவர். அதுபோல, எங்கள் கட்சி மேலிடம், இரண்டு தொகுதிகளில் போட்டியிட, எனக்கு வாய்ப்பளித்தது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE