பாதாமி தொகுதியில் பா.ஜ., தலைவர்களே என்னை தோற்கடித்தனர் ; அமைச்சர் ஸ்ரீராமுலு | Dinamalar

பாதாமி தொகுதியில் பா.ஜ., தலைவர்களே என்னை தோற்கடித்தனர் ; அமைச்சர் ஸ்ரீராமுலு

Added : பிப் 21, 2021
Share
சித்ரதுர்கா : "பாதாமி தொகுதியில், வாக்காளர்கள் என்னை தோற்கடிக்கவில்லை. பா.ஜ., தலைவர்களே என்னை தோற்கடித்தனர்," என, சமூக நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார். சித்ரதுர்காவில், நேற்று அவர் கூறியதாவது:முந்தைய சட்டசபை தேர்தலில், பாதாமி தொகுதியில் வாக்காளர்கள் என்னை தோற்கடிக்கவில்லை. வால்மீகி சமுதாயத்தின், ஸ்ரீராமுலு வெற்றி பெற்றால், தங்களுக்கு பாதிப்பு

சித்ரதுர்கா : "பாதாமி தொகுதியில், வாக்காளர்கள் என்னை தோற்கடிக்கவில்லை. பா.ஜ., தலைவர்களே என்னை தோற்கடித்தனர்," என, சமூக நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.

சித்ரதுர்காவில், நேற்று அவர் கூறியதாவது:முந்தைய சட்டசபை தேர்தலில், பாதாமி தொகுதியில் வாக்காளர்கள் என்னை தோற்கடிக்கவில்லை. வால்மீகி சமுதாயத்தின், ஸ்ரீராமுலு வெற்றி பெற்றால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி, பா.ஜ., தலைவர்களே, என்னை தோற்கடித்தனர்.பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷ போன்ற பெரிய தலைவர்கள் மட்டும், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவர். அதுபோல, எங்கள் கட்சி மேலிடம், இரண்டு தொகுதிகளில் போட்டியிட, எனக்கு வாய்ப்பளித்தது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X