பொது செய்தி

தமிழ்நாடு

வேலி போட்டாச்சு! பொள்ளாச்சி சர்க்கஸ் மைதானத்துக்கு கழிவு குவிப்பதை தவிர்க்க வேண்டும்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்திலுள்ள சர்க்கஸ் மைதான இடத்தில்,கட்டட கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதை தடுக்க, நகராட்சிநிர்வாகம் சார்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.அங்கு, கழிவு கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே, நகராட்சிக்கு சொந்தமான சர்க்கஸ் மைதானம் உள்ளது.இந்த மைதானத்தில் பொருட்காட்சி, சர்க்கஸ்,
 வேலி போட்டாச்சு! பொள்ளாச்சி சர்க்கஸ் மைதானத்துக்கு கழிவு குவிப்பதை தவிர்க்க வேண்டும்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்திலுள்ள சர்க்கஸ் மைதான இடத்தில்,கட்டட கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதை தடுக்க, நகராட்சிநிர்வாகம் சார்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.அங்கு, கழிவு கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே, நகராட்சிக்கு சொந்தமான சர்க்கஸ் மைதானம் உள்ளது.
இந்த மைதானத்தில் பொருட்காட்சி, சர்க்கஸ், வணிக கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், நடத்த பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தவும் இந்த மைதானம் பயன்படுத்தப்படுகிறது.காலை மற்றும் மாலை நேரங்களில், மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழவும், வாகனங்கள் பழகுவோரும்; வாக்கிங் செல்வோரும் இந்த மைதானத்தை பயன்படுத்தினர்.பலருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ள மைதானம், தற்போது கட்டட கழிவுகள் கொட்டும் இடமாக நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. நிலம் நிரப்புதல் மற்றும் இதர பணிகளுக்கு கட்டட இடிபாடுகள் தேவைப்படுவோர் சர்க்கஸ் மைதானத்தில் உள்ளவற்றை இலவசமாக எடுத்து செல்லலாம் என்றும், நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.இதனையடுத்து, சர்க்கஸ் மைதானத்தில் கட்டட கழிவுகள், பாதாள சாக்கடை திட்டம், ரோடு விரிவாக்கத்துக்காக தோண்டப்படும் ரோடு கழிவுகள், மண் போன்றவை கொட்டப்பட்டுள்ளன. இதனால், கழிவுகள் குவிக்கும் இடமாக மாறி மாணவர்கள் விளையாட இடமில்லாத நிலை ஏற்பட்டது.அதிகளவு கட்டட கழிவுகள் குவிந்துள்ள நிலையில், மக்கள் இதனை அப்புறப்படுத்தி சமப்படுத்தி, மைதானத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மைதானத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைத்துள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி பல இடங்களில் ரோட்டோரம் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. நகராட்சி நிர்வாகம் சர்க்கஸ் மைதானத்தை, கட்டட கழிவு கொட்டுவதற்கு தேர்வு செய்த போதே, பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.தற்போது, மைதானத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளது வரவேற்கதக்கது. அதே நேரத்தில், கழிவுகளை அப்புறப்படுத்தி மைதானத்தில், வழக்கம் போல வாக்கிங், மாணவர்கள் விளையாட பயன்படுத்தும் வகையில், செப்பணிட வேண்டும்.கட்டட கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். இங்கு கழிவு கொட்டாமல், மாற்று இடம் தேர்வு செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். நகராட்சி பள்ளி மைதானங்களை வேறு விளையாட்டு பயன்பாட்டிற்கு மாற்றி வரும் நிலையில், சர்க்கஸ் மைதானத்தை காலியாக வைத்திருந்தால் விளையாடுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.
கழிவு கொட்ட மாற்று இடம்!
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சர்க்கஸ் மைதானத்தில், நகராட்சியின் அனுமதியுடன் கட்டட கழிவு கொட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகளவு கழிவுகள் குவிக்கப்பட்டன. இதனை கட்டுப்படுத்தும் வகையில், சர்க்கஸ் மைதானத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.மைதானத்தில் உள்ள கழிவுகள் தேவைப்படுவோருக்கு வழங்கி சுத்தப்படுத்தி மைதானமாக வைக்க ஆலோசிக்கப்படுகிறது. முதற்கட்டமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கை குறித்து ஆலோசித்து, கட்டட கழிவுகள் கொட்ட மாற்று இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X