கடலின் சீற்றத்தால் அரித்து செல்லப்பட்டமணல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலின் சீற்றத்தால் அரித்து செல்லப்பட்டமணல்

Added : பிப் 21, 2021
Share
பழவேற்காடு : --பழவேற்காடில், கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், கடற்கரை பகுதிகளில், மணல் அரிப்பு அதிகரித்து உள்ளதுடன், மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர். மூன்று தினங்களாக, பொன்னேரி மற்றும் பழவேற்காடு பகுதிகளில், அதிகாலை நேரங்களில், லேசான மழை பொழிவு இருந்து வருகிறது.பழவேற்காடில், கடல் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்படுகிறது. ஆர்ப்பரித்துவரும் அலைகள்,

பழவேற்காடு : --பழவேற்காடில், கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், கடற்கரை பகுதிகளில், மணல் அரிப்பு அதிகரித்து உள்ளதுடன், மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர்.

மூன்று தினங்களாக, பொன்னேரி மற்றும் பழவேற்காடு பகுதிகளில், அதிகாலை நேரங்களில், லேசான மழை பொழிவு இருந்து வருகிறது.பழவேற்காடில், கடல் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்படுகிறது. ஆர்ப்பரித்துவரும் அலைகள், கரைகளில் உள்ள மணலை அரித்து செல்கின்றன. கடற்கரை பகுதிகளில், 10 - 15 அடி வரை மணல் அரித்து செல்லப்பட்டு உள்ளது. கடல் சீற்றம் அதிகம் காரணமாக, மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர். மீன்பிடி வலைகள், படகுகள், ஏரிப்பகுதிகளில் ஓய்வெடுத்து வருகின்றன.

இது குறித்து மீனவர்கள் தெரிவித்ததாவது:முகத்துவாரம் வழியாக கடலுக்குள் செல்ல வேண்டும், கடல் சீற்றமாக இருப்பதால், படகுகள் தடுமாற்றம் அடைகின்றன. அதிக அலைகளின் இடையே படகுகளை இயக்குவதும் சிரமம்.அசம்பாவிதங்களை தவிர்க்க மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. கடல் சீற்றம் குறைந்தபின் வழக்கம்போல் தொழிலுக்கு செல்வோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X