பொள்ளாச்சி:பொள்ளாச்சி, காமாட்சி அம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது.பொள்ளாச்சி, பாலமாணிக்கம் வீதி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, இரண்டு கால யாக பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இன்று காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, யாத்ரதானம், கலசங்கள் புறப்படுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிேஷகம், பரிவார கோபுரங்கள் கும்பாபிேஷக விழா நடக்கிறது.காலை, 9:15 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு கும்பாபிேஷகம், அன்னதானம், மகா அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகளும்; மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE