பொது செய்தி

தமிழ்நாடு

குற்றங்களை தடுக்க தனிப்படை கண்காணிப்பு: வனத்துறை நடவடிக்கை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'வனப்பகுதியில், குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக,' வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் புலித்தோல், யானை தந்தம், யானை பற்கள் விற்பனை குறித்து கண்டறிந்து குற்றவாளிகளை வனத்துறையினர் கைது செய்தனர். இதனை தடுக்க, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளும் வகையில், தனிப்படை

பொள்ளாச்சி:'வனப்பகுதியில், குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக,' வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் புலித்தோல், யானை தந்தம், யானை பற்கள் விற்பனை குறித்து கண்டறிந்து குற்றவாளிகளை வனத்துறையினர் கைது செய்தனர். இதனை தடுக்க, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளும் வகையில், தனிப்படை அமைத்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வனப்பகுதிக்குள் வாழும் மக்கள் வனத்தையும், வன உயிரினங்களையம் பாதுகாப்பது கட்டாயாமாகும்.வனத்தில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை சேகரம் செய்து விற்கவோ அல்லது வனத்தை சேராத ஆட்களை வனப்பகுதிக்குள் நுழையவோ அனுமதிக்க கூடாது.இதனை கண்காணிக்கும் வகையில், தனிப்படை அமைத்து, வனப்பகுதிக்குள் இருக்கும் அனைத்து குடியிருப்பிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, தவறுகள் ஏதேனும்தென்படும் பட்சத்தில், கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X