வீடுகளை சேதப்படுத்திய யானைகள் விரட்டியடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடுகளை சேதப்படுத்திய யானைகள் விரட்டியடிப்பு

Added : பிப் 21, 2021
Share
வால்பாறை:வால்பாறை அருகே, வீட்டை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டினர்.வால்பாறை, சின்கோனா டான்டீ தேயிலை தோட்டம், லாசன்டிவிஷன் முதல்பிரிவுக்கு நேற்று முன்தினம் இரவு கூட்டமாக வந்த யானைகள், வடமாநில தொழிலாளி சுக்தேவ் என்பவரின் வீட்டை இடித்தி சேதப்படுத்தின.யானைகளிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர்களை, சக தொழிலாளர்கள் பத்திரமாக மீட்டு, அருகில் உள்ள
 வீடுகளை சேதப்படுத்திய யானைகள் விரட்டியடிப்பு

வால்பாறை:வால்பாறை அருகே, வீட்டை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டினர்.வால்பாறை, சின்கோனா டான்டீ தேயிலை தோட்டம், லாசன்டிவிஷன் முதல்பிரிவுக்கு நேற்று முன்தினம் இரவு கூட்டமாக வந்த யானைகள், வடமாநில தொழிலாளி சுக்தேவ் என்பவரின் வீட்டை இடித்தி சேதப்படுத்தின.யானைகளிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர்களை, சக தொழிலாளர்கள் பத்திரமாக மீட்டு, அருகில் உள்ள வீடுகளில் தங்க வைத்தனர்.தகவல் அறிந்து வந்த, வனத்துறையினர் யானைகளை ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், வனத்துக்குள் விரட்டினர்.மேலும், வால்பாறை நகரில் உள்ள தனியார் மருந்துக்கடை ஊழியர் தமிழ்அழகன்,23, நேற்று முன் தினம் பணி முடிந்து இரவு, 8:30 மணிக்கு பைக்கில் வீடு திரும்பிய போது, எதிரே வந்த யானையை கண்டு, பைக்கை வேகமாக இயக்கி தப்பினார்.வனத்துறையினர் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், நல்லமுடி காட்சிமுனை, சின்னக்கல்லாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் வாழை, பலா போன்ற மரங்கள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X