பெங்களூரு : கர்நாடகாவில், பள்ளி, கல்லுாரிகள் துவங்கியுள்ளன. பஸ் பாஸ் பெறுவதில், மாணவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. எனவே, முன் இருந்ததை போல, பஸ் பாசுக்கு விண்ணப்பிப்பதை, எளிமையாக்க வேண்டும் என, வலியுறுத்தல் எழுந்துள்ளது.
கர்நாடகாவில், கொரோனா ஊரடங்கால் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லுாரிகள் படிப்படியாக திறக்கப்படுகின்றன. மாணவர்களும் உற்சாகமாக வகுப்புகளுக்கு செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு, பஸ் பாஸ் பெறுவதில், தொந்தரவு ஏற்பட்டுள்ளது.இதுவரை போக்குவரத்துக்கழக அலுவலகங்களில், விண்ணப்பித்து சலுகை கட்டண பஸ் பாஸ் பெறும் வசதி இருந்தது. இதனால் மாணவர்களால், எளிதாக பஸ் பாஸ் பெற முடிந்தது. மாணவர்களின் வசதிக்காக, பிப்., இறுதி வரை, பழைய பாஸ்களை பயன்படுத்தி, பயணிக்க வாய்ப்பளிக்கப் பட்டது. மார்ச் 1 முதல் மாணவர்கள், புதிய பஸ் பாஸ் பெற்று பயணிக்க வேண்டும்.
பாஸ்களுக்கு 'சேவா சிந்து' இணையதளம் மூலம், விண்ணப்பிக்க வேண்டும். இதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளதால், மாணவர்களால் விண்ணப்பம் தாக்கல் செய்ய முடியவில்லை. விண்ணப்பம் தாக்கல் செய்ய, இணையதள மையங்களில், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.எனவே, ஆன்லைனில், பிரச்னை ஏற்பட்டுள்ளதால், பழையபடி அலுவலகங்களில், விண்ணப்பம் பெற்று, பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE