சென்னை : தமிழகம் முழுதும், சில குறிப்பிட்ட நில ஆவணங்கள் மட்டும், கம்ப்யூட்டர் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
நத்தம், நத்தம் புறம்போக்கு போன்றவை மூலமாக வழங்கப்பட்டுள்ள வீட்டுமனைகளின் விவரங்கள், கிராம நிர்வாக அலுவலக பதிவேடுகளில் மட்டுமே உள்ளன.அதேபோல், தாலுகா அலுவலகத்தில் உள்ள, சர்வே பிரிவிலும், புல எண்களுடன் கூடிய பதிவேடுகள், புல வரைபடங்கள் உள்ளன.கம்ப்யூட்டர் மூலமாக பதிவு செய்யப்படாததால், ஆவணங்களை, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில், பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், தமிழகம் முழுதும், நில ஆவணங்களை நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அந்தவகையில், சென்னை மாவட்டத்தில், முதல் கட்டமாக, மயிலாப்பூர் தாலுகாவில், நில அளவை பதிவேடுகள் துறையின் கீழ், நில ஆவண மேலாண்மை மையம் திறக்கப்பட்டுஉள்ளது.இதை சமீபத்தில், கலெக்டர் சீதாலட்சுமி திறந்து வைத்தார். இதைதொடர்ந்து, மீதமுள்ள, 15 தாலுகாக்களிலும், இந்த மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE