உற்பத்தியை குறைக்காதீர்கள்: எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தல்

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புது டில்லி: கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவால் இந்தியாவில் எரிபொருட்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது. எனவே உற்பத்தியை குறைக்க வேண்டாம் என எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.மும்பையில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் 97 ரூபாயை எட்டியுள்ளது. டீசல் 88 ரூபாயை கடந்தது.

புது டில்லி: கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவால் இந்தியாவில் எரிபொருட்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது. எனவே உற்பத்தியை குறைக்க வேண்டாம் என எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.



latest tamil news



மும்பையில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் 97 ரூபாயை எட்டியுள்ளது. டீசல் 88 ரூபாயை கடந்தது. கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எரிபொருள் தேவை பெருமளவு குறைந்தது. இதனால் எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தன. அந்த முடிவை அப்போது இந்தியா ஆதரித்தது. ஆனால் தற்போது தேவை அதிகரித்திருப்பதால் உற்பத்தியை குறைக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கிய பெட்ரோலிய அமைச்சர், “மாநிலங்களும் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை அதிகரித்துள்ளன. அதனால் விலை உயர்வுக்கு மத்திய அரசை விமர்சிப்பது தவறு.
சர்வதேச சந்தை எரிபொருள் உற்பத்தியை குறைத்திருப்பதும், அதிக லாபத்திற்காக எண்ணெய் உற்பத்தி நாடுகளும் அதை செய்வதும் தான் எரிபொருள் விலை உயர்வுக்கான காரணங்கள். இது எரிபொருளை வாங்கும் நாடுகளை பாதிக்கிறது. ஒபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிடம் எரிபொருள் உற்பத்தியை குறைக்க வேண்டாம் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.” என்றார்.


latest tamil news




இன்னும் சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்க உள்ள அசாம், மேற்கு வங்க மாநில அரசுகள் மாநில வரியை குறைத்துள்ளன. அசாம் அரசு லிட்டருக்கு ரூ.5-ம், மேற்கு வங்க அரசு ரூ.1-ம் குறைத்துள்ளன. அ.தி.மு.க., அரசும் தேர்தலை மனதில் வைத்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் நாளை பெட்ரோல் மீதான வரி குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-பிப்-202118:29:49 IST Report Abuse
S.Baliah Seer இப்பவே நிறைய பேர் நடத்தல் அல்லது சைக்கிளின் மூலமே பயணம் செய்கிறார்கள்.மக்களே, இரு சக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை குப்பையில் உருட்டி விடுங்கள்.
Rate this:
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
22-பிப்-202115:59:10 IST Report Abuse
Kumar முதலில் வரியை குறை. அப்புறம் அவனுன்களிடம் போய் கெஞ்சு சிப்ஸ்
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
22-பிப்-202113:00:39 IST Report Abuse
Ramalingam Shanmugam மின் வாகனங்களை ஊக்குவியுங்க இவனுங்க வழிக்கு வருவானுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X