திருத்தணி : திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் அலுவலகத்தில், செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி, வரும், 25ம் தேதி, போடப்பட உள்ளது.
இது குறித்து கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் கூறியதாவது:திருத்தணி நகர மற்றும் ஒன்றிய பொதுமக்கள் நலன் கருதி, வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள், நாய், பூனை ஆகியவற்றுக்கு, இம்மாதம், 25ம் தேதி, காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, திருத்தணி கால்நடை மருந்தகத்தில் வெறிநோய் தடுப்பூசி, இலவசமாக போடும், சிறப்பு முகாம் நடக்கிறது.ஆகையால், பொதுமக்கள் அனைவரும், தங்களது வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு, ரேபிஸ் - வெறிநோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE