உடுப்பி : வானத்தில் பறந்து, தண்ணீரில் தரையிறங்கும் விமானத்தை, உடுப்பியை சேர்ந்த, 'த்ருதி' குழுவினர் தயாரித்துள்ளனர்.
உடுப்பி மாவட்டம், ஹெஜவாடி நடிகுத்ரி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் அமின், 40. கல்லுாரி மாணவர்களுக்கு, 'ரிமோட் கண்ட்ரோல்' விமானம் போன்றவற்றை செய்து தருகிறார். மேலும், விமானம் தொடர்பான, 'ஏரோநாட்டிகல்' மாணவர்களுக்கு, பல விதமான புராஜக்ட் செய்து தருகிறார்.இவர், ஏரோனாட்டிகல் மாணவர்களை உள்ளடக்கிய, 'த்ருதி' என்ற குழுவை உருவாக்கி உள்ளார். அவர்கள் உதவியுடன் புஷ்பராஜ், 15 ஆண்டு கால உழைப்பில் வானத்திலும், தண்ணீரிலும் மிதக்கும் 'மைக்ரோ லைட்' கடல் விமானத்தை தயாரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:இது, 190 கிலோ எடையை தாங்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. விமானத்தில், 200 எச்.பி., திறன் கொண்ட, சிமோனி இத்தாலி இன்ஜின் பயன்படுத்தி, இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.மூன்று லட்சம் ரூபாய் செலவிலான இந்த விமானத்தில், தற்போது ஒருவர் மட்டுமே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இதன் வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் விமானம் தயாரிப்பது தொடர்பாக, நடுகுர்துவியில் ஒரு தொழிற்சாலை அமைக்க முன் வர வேண்டும்.
இதன் மூலம், விமானத்தை மேலும் மேம்படுத்தி அதிக அளவில் தயாரிக்க முடியும்.மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களை காப்பாற்ற இந்த விமானம் மிகவும் உதவிகரமாக இருக்கும். எங்களின் முயற்சிக்கு அரசு உதவிகரமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE