குடிசை வீடு எரிந்து நாசம்ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், பனப்பாக்கம், அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மனைவி கவுரி. குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் மாலை, திடீரென இவர்கள் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கம் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். தேர்வாய் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.இதனிடையே, வீட்டில் இருந்த துணிகள், மளிகை பொருட்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இருவர் மாயம்ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 38. இவரது தாயார், மீனாட்சி, 55. மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், 15 ஆண்டுகளாக வீட்டிலேயே உள்ளார். கடந்த, 18ம் தேதி, விஜயகுமாரின் தந்தை சேஷாத்திரி விவசாய வேலைக்குச் சென்றுவிட்டு, மதியம் வந்து பார்த்தபோது, வீட்டில் மீனாட்சி இல்லை.இதுகுறித்து விஜயகுமார், பெரியபாளையம் போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து, மீனாட்சியை தேடி வருகின்றனர். பூண்டி ஒன்றியம், நம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் மோகன், 45. இவரது இளைய மகள் மோனிகா, 21. கடந்த, 17ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து, மோகன், பென்னலுார்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து, மோனிகாவை தேடி வருகின்றனர்.க
ல்லுாரி மாணவி மாயம்சோழவரம்: சோழவரம் அடுத்த, சிறுணியம் கிராமத்தை சேர்ந்த, 19 வயது இளம்பெண், பொன்னேரி அரசு கல்லுாரியில் படித்து வருகிறார்.கடந்த, 19ம் தேதி, கல்லுாரியில் தேர்வு எழுத செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் தோழியர் வீடுகளில் விசாரித்தும், கல்லுாரி மாணவி குறித்து தகவல் இல்லை. இதையடுத்து, மாணவியின் பெற்றோர், சோழவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE