பொது செய்தி

இந்தியா

மாநாட்டுக்கு நல்ல வரவேற்பு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : இட ஒதுக்கீடு வலியுறுத்தி, பெங்களூரின் அரண்மனை மைதானத்தில், லிங்காயத் பஞ்சமசாலி சமுதாயத்தினர், நேற்று நடத்திய மாநாட்டுக்கு, அமோக வரவேற்பு கிடைத்தது. லிங்காயத் பஞ்சமசாலி சமுதாயத்தினர், இட ஒதுக்கீடு கேட்டு மாநில அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில், நேற்று மதியம் பிரம்மாண்ட மாநாடு நடத்தினர். இச்சமுதாயத்தினர் அதிக

பெங்களூரு : இட ஒதுக்கீடு வலியுறுத்தி, பெங்களூரின் அரண்மனை மைதானத்தில், லிங்காயத் பஞ்சமசாலி சமுதாயத்தினர், நேற்று நடத்திய மாநாட்டுக்கு, அமோக வரவேற்பு கிடைத்தது.

லிங்காயத் பஞ்சமசாலி சமுதாயத்தினர், இட ஒதுக்கீடு கேட்டு மாநில அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில், நேற்று மதியம் பிரம்மாண்ட மாநாடு நடத்தினர். இச்சமுதாயத்தினர் அதிக எண்ணிக்கையில் உள்ள கலபுரகி, விஜயபுரா, பாகல்கோட்டை, யாத்கிர், பீதர், ராய்ச்சூர், கொப்பால், பல்லாரி, ஹாவேரி, தார்வாட், பெலகாவி என, வெவ்வேறு பகுதிகளிலிருந்து, பெருமளவில் மாநாட்டுக்கு வந்தனர்.லிங்காயத் பஞ்சமசாலி சமுதாய தலைவர்கள் பேசியதாவது:எங்கள் சமுதாயத்தை, 3-பி பிரிவிலிருந்து, 2-ஏ பிரிவில் சேர்க்க வேண்டும்.

இவ்விஷயத்தில், அரசு விரைந்து முடிவு செய்ய வேண்டும். கல்வி, பொருளாதாரம், சமூக ரீதியில் பின் தங்கிய எங்கள் சமுதாயத்துக்கு, பா.ஜ., நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். ஒருவேளை மாநில அரசு, எந்த முடிவும் எடுக்காவிட்டால், லிங்காயத் பஞ்சமசாலி சுவாமிகள் தலைமையில், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க, முடிவு செய்துள்ளோம். அரசு இன்றே எங்கள் கோரிக்கையை, நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், விதான்சவுதாவை நோக்கி செல்வோம். எங்களின் சமுதாயத்துக்கு, நியாயம் கிடைக்க நிரந்தரமாக போராடுகிறோம்.

அரசுக்கு பல முறை, கெடு விதித்தோம். எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவரே, முதல்வராக இருப்பதால், இட ஒதுக்கீடு கேட்டு வலியுறுத்துகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறாததால், கூடல சங்கமாவிலிருந்து, பெங்களூரு வரை பாதயாத்திரை நடத்தி, மாநாடு நடத்துகிறோம்.லிங்காயத் பஞ்சமசாலி சமுதாய சங்கத்துக்கு, 30 ஆண்டு வரலாறு உள்ளது. அரசு அலட்சியம் காண்பிக்காமல், இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை, கைவிட மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X