காங்கிரசார் வாய்ப்புகளை தேடிச்செல்ல வேண்டியதில்லை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : "காங்கிரசார் வாய்ப்புகளை தேடிச்செல்ல வேண்டியதில்லை. மத்திய, மாநிலத்திலுள்ள, பா.ஜ., அரசுகளே, நம் வீட்டு வாசலுக்கு கொண்டு வரும்," என, மாநில காங்., தலைவர் சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரு நகரின், சவுடய்யா மெமோரியல் ஹாலில், மாநில காங்., கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, பாராட்டு நிகழ்ச்சியில், சிவகுமார் பங்கேற்றார்.அவர் பேசியதாவது: அரசியலில் யாரும்,

பெங்களூரு : "காங்கிரசார் வாய்ப்புகளை தேடிச்செல்ல வேண்டியதில்லை. மத்திய, மாநிலத்திலுள்ள, பா.ஜ., அரசுகளே, நம் வீட்டு வாசலுக்கு கொண்டு வரும்," என, மாநில காங்., தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு நகரின், சவுடய்யா மெமோரியல் ஹாலில், மாநில காங்., கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, பாராட்டு நிகழ்ச்சியில், சிவகுமார் பங்கேற்றார்.அவர் பேசியதாவது: அரசியலில் யாரும், நம்மை தேடி வந்து வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள். நீங்களே வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என, முன்னாள் பிரதமர் இந்திரா கூறியிருந்தார். ஆனால், இப்போது வாய்ப்புகளை, நாம் தேடிச்செல்ல வேண்டியதில்லை. மத்திய, மாநில அரசுகள் வாய்ப்புகளை நம் வீட்டு வாசலுக்கு, கொண்டு வந்து தருகின்றனர்.காங்கிரசில், நபரை பூஜிக்க வாய்ப்பில்லை; கட்சியை பூஜிக்க வேண்டும்.

நானாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும், வாழ்த்து கோஷம் போடாதீர்கள். இனி காங்., - எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.பி.,க்கள், எம்.பி.,க்கள் என யாராக இருந்தாலும், கட்சி அலுவலகத்தில் தான், கூட்டம் நடத்த வேண்டும். தங்களின் வீட்டில் நடத்தக்கூடாது.முன்னாள் அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, ஜார்ஜ் தலைமையில் இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கமிட்டி கட்சி அலுவலகங்களுக்கு, சொந்த கட்டடம் வழங்க, நடவடிக்கை எடுக்கும்.ஒருவேளை அலுவலக கட்டடம் இல்லையென்றால், மரத்தடியில் கூட்டம் நடத்தினாலும் சரி, வீட்டுக்கு வெளியே கூட்டம் நடத்த வேண்டும்.அதை நிறைவேற்ற உழைக்க வேண்டும். கட்சியின் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். கட்சி வளர வேண்டும்.

ஏற்கனவே, ஒன்பது மாவட்டங்களில், நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். நடப்பாண்டு மேலும் மூன்று சட்டசபை தொகுதிகளில், சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்துவேன். மல்லிகார்ஜுன கார்கே, ஐந்து ஆண்டுகள் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக, திறமையாக பணியாற்றியதால், தற்போது அவருக்கு, ராஜ்யசபா எதிர்க்கட்சி பதவி அளிக்கப்பட்டுள்ளது. உங்களின் சார்பில், நான் அவரை வாழ்த்துகிறேன்.மூத்த தலைவர் எச்.கே.பாட்டீல், செயற்குழு கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மஹாராஷ்டிரா பொறுப்பை அளித்துள்ளனர். இளம் தலைவர் தினேஷ் குண்டுராவுக்கு, தமிழகம், புதுச்சேரி, கோவா மாநிலங்களின் பொறுப்பை அளித்துள்ளனர். முனியப்பாவுக்கு, செயற்குழுவில் இடம் அளித்துள்ளனர். ஹரிப்பிரசாத்துக்கு, மேற்கு வங்கம் பொறுப்பை அளித்துள்ளனர்.வீரப்ப மொய்லிக்கு, தமிழக தேர்தல் பொறுப்பு, பரமேஷ்வருக்கு கேரளா பொறுப்பை அளித்துள்ளனர். ஒரு நபரின் பின்னால், எத்தனை பேர் உள்ளனர் என்பதை விட, ஒரு நபர் எத்தனை தலைவர்களை வளர்க்கிறானோ, அவனே உண்மையான தலைவர் என, மகாத்மா காந்தி கூறினார். ஜனார்த்தன பூஜாரி, ஆஸ்கர் பெர்னான்டஸ் போன்ற தலைவர்களை, மறக்க முடியாது.

மாநிலத்தின் மீது நம்பிக்கை வைத்த இந்திரா, சிக்கமகளூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சோனியா பல்லாரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை, நாம் காப்பாற்ற வேண்டும்.கஷ்ட காலத்தில், ராமலிங்கரெட்டி, கட்சியை வளர்த்தார். இவரை செயல் தலைவராக, கட்சி மேலிடம் நியமித்துள்ளது. அவருடன் துருவ நாராயணாவுக்கும், பொறுப்பை அளித்துள்ளனர். இவர் மாணவர் தலைவராக இருந்த போது, அவருடன் நானும் பணியாற்றினேன். அவர் சட்டசபை, லோக்சபாவில் நுழைந்தார். வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில், சட்டசபையில் நுழைந்த சாதனை அவருடையதாகும்.இவரை போல, புதிதாக நியமிக்கப்பட்ட, கட்சி நிர்வாகிகளை பாராட்ட, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X