சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ள ரூபாய் நோட்டு 'டெபாசிட்': சிக்கியவரிடம் போலீஸ் விசாரணை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஆக்ஸிஸ் வங்கி கணக்கில் கள்ள ரூபாய் நோட்டு 'டெபாசிட்' செய்த நபரிடம் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள, ஆக்ஸிஸ் வங்கியில் ஒருவர், இரண்டு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய சென்றுள்ளார். பணம் டெபாசிட் செய்யும் போது, கேஷியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.உடனடியாக வங்கி மேலாளர் செல்வகுமரேசனுக்கு தகவல் கொடுத்தார். வங்கி

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஆக்ஸிஸ் வங்கி கணக்கில் கள்ள ரூபாய் நோட்டு 'டெபாசிட்' செய்த நபரிடம் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள, ஆக்ஸிஸ் வங்கியில் ஒருவர், இரண்டு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய சென்றுள்ளார். பணம் டெபாசிட் செய்யும் போது, கேஷியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.உடனடியாக வங்கி மேலாளர் செல்வகுமரேசனுக்கு தகவல் கொடுத்தார். வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள், இரண்டு லட்சம் ரூபாயை சோதனை செய்ததில், 28 எண்ணிக்கையிலான, 500 ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகளாக இருப்பது தெரிய வந்தது.இது குறித்து வங்கி மேலாளர், கிழக்கு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கியில் பணம் செலுத்த வந்த ஆவலப்பம்பட்டியை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.போலீசார் கூறுகையில், 'வங்கியில், தனியார் நிறுவனத்தின் பெயரில் பணம் செலுத்த விஜயகுமார் வந்துள்ளார். அவரும், அதே நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். அவர் செலுத்திய நோட்டில், 28 நோட்டுகள் கள்ள ரூபாய் நோட்டுகளாகும். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X