'வாட்ஸ் ஆப்' மூலம் பிரசாரம் செய்வது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக, வாட்ஸ் ஆப் குரூப்பில் உள்ள, 'அட்மின்'கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு குரூப்பிலும், 250 பேராவது உறுப்பினராக இருப்பர். இந்த குரூப் அட்மின்களை கட்சியினர் வளைக்கின்றனர்.
தங்களின் பிரசார தகவல்கள், தேர்தல் வாக்குறுதிகள், தொகுதி நிலவரம், எதிர்க்கட்சிகள் குறை நிறைகள், தேர்தல் களம், கிசுகிசு, பத்திரிகைகளில் வரும் தேர்தல் செய்திகள், தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் வீடியோ போன்றவற்றை குரூப் அட்மின்களுக்கு, அனுப்புவர்.
குரூப் அட்மின்கள் அவற்றை குருப்பிலும், குரூப்பில் உள்ளவர்களுக்கு தனித்தனியாகவும் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலும், சம்பந்தப்பட்ட கட்சியின், 'ஐ.டி., விங்'கை சேர்ந்த ஒருவர் உறுப்பினராக இருந்து, அனுப்பப்படும் தகவல்கள் அனைவருக்கும் கிடைக்கிறதா என கண்காணிக்கிறார்.
அதே போல், புதியதாகவும் குரூப் உருவாக்கப்பட்டு, அதில் தங்களுக்கு வேண்டியவர்களையே அட்மின்களாக நியமிக்கின்றனர். அந்த குரூப்பில் உள்ள உறுப்பினர்களும், புதிய, பழைய குரூப்களிலும் இணைக்கப்படுகின்றனர். இதற்காக குரூப் அட்மின்களுக்கு, தலா, 25 ஆயிரம் முதல், 2 லட்சம் ரூபாய் வரை, கட்சியினரால் வழங்கப்படுகிறது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி,வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள, வாட்ஸ் ஆப் குரூப் அட்மின்கள் விபரம், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., -பா.ம.க., ஆகிய கட்சிகளில் உள்ள, தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளால் சேகரிக்கப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து பேரம் நடந்து வருகிறது.
பிரசாரத்துக்கு சம்மதித்தகுழு அட்மின்களுக்கு, முதல்கட்டமாக, தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இதே போல, தமிழகம் முழுதும் வாட்ஸ் குழு அட்மின்கள் வளைக்கப் படுகின்றனர்.தவிர தினமும், புதிதாக, 50 குரூப்கள் உருவாக்கப்படுகின்றன.
அந்த குருப்களில் செய்திகளை உடனுக்குடன் அனுப்பி வைக்க, தேர்தல் முடியும் வரை, மூத்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்களை, மீடியாவை சேர்ந்தவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.அவர்களுக்கும், கட்சியினர், 50 ஆயிரம் முதல், 2 லட்சம் ரூபாய் வரை வழங்கி வருகின்றனர்.தேர்தல் முடியும் வரை பண மழை தொடரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE