உடுமலை:உடுமலை நகரின், பிரதான ரோடாக உள்ள தளி ரோடு விரிவாக்கப்பணி இழுபறியாகி வருவதால், நெரிசல், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.உடுமலை - தளி ரோடு, திருமூர்த்திமலை, அமராவதி, மூணாறு என சுற்றுலா மையங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான ரோடாகவும், கேரளா மாநிலத்திற்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது.மேலும், வணிக நிறுவனங்கள், கடைகள், நகைக்கடைகள், அரசு அலுவலகங்கள் என நகரின் மையப்பகுதியாகவும், நகரின் பெரும்பாலான ரோடுகள் இணையும், பிரதான ரோடாக உள்ளது. இதனால், இந்த ரோட்டில் அபரிமிதமான வாகன போக்குவரத்து உள்ளது.வாகன நெரிசல் மற்றும் நடக்கும் விபத்துக்களை கருத்தில் கொண்டு, ரோட்டை அகலப்படுத்த திட்டமிடப்பட்டது.இதற்காக, மூன்று ஆண்டுக்கு முன், ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரோட்டை நேர் செய்யும் வகையில், தனியாரிடமிருந்து நிலங்களும் தானமாக பெறப்பட்டது.ஆனால், தொடர்ந்து ரோடு விரிவாக்கம் செய்யும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மேலும், அதிகாரிகள் அலட்சியத்தால், மீட்கப்பட்ட ரோட்டோரங்களில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.இதனால், ரோட்டில் வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களும் மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த ரோட்டை அகலப்படுத்தும் திட்டத்தை உடனடியாக துவக்க, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE