பொது செய்தி

இந்தியா

கொரோனாவில் இருந்து 1.07 கோடி பேர் மீட்பு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான, 1.09 கோடி பேரில், குணமடைந்தோர் எண்ணிக்கை, 1.07 கோடியை நெருங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா பாதிப்பு கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 6.70 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் வாயிலாக, 14 ஆயிரத்து, 264 பேரிடம், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான, 1.09 கோடி பேரில், குணமடைந்தோர் எண்ணிக்கை, 1.07 கோடியை நெருங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா பாதிப்பு கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 6.70 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் வாயிலாக, 14 ஆயிரத்து, 264 பேரிடம், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன், இதுவரை வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, ஒன்பது லட்சத்து, 91 ஆயிரத்து, 651 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனா பாதிப்பிற்கு, 1.45 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த பாதிப்பில் இவர்களின் விகிதம், 1.32 சதவீதம்.சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கையால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, ஆறு லட்சத்து, 89 ஆயிரத்து, 715 ஆக உயர்ந்துள்ளது; மீட்பு விகிதம், 97.25 சதவீதமாக உள்ளது.கொரோனாவால் கடந்த, 24 மணி நேரத்தில், மஹாராஷ்டிராவில், 40 பேர், கேரளாவில், 13 பேர் உட்பட, 90 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இவர்களுடன், இதுவரையிலான பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 302 ஆக உயர்ந்துள்ளது; பலி எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் தொடர்கிறது. இம்மாநிலத்தில், 51 ஆயிரத்து, 753 பேர் உயிரிழந்துள்ளனர்.இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில், 12 ஆயிரத்து, 457 பேரும், அடுத்ததாக கர்நாடகாவில், 12 ஆயிரத்து, 292 பேரும் பலியாகி உள்ளனர்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X