பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
ஆயுதங்கள் பறிமுதல்ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், பிரபல ஓட்டல் உரிமையாளர் மகன் மீது, சமீபத்தில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர், அனந்த்நாக் மாவட்ட வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த, 'ஏகே' ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் நேற்று கைப்பற்றினர்.பாக்.,

ஆயுதங்கள் பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், பிரபல ஓட்டல் உரிமையாளர் மகன் மீது, சமீபத்தில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர், அனந்த்நாக் மாவட்ட வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த, 'ஏகே' ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் நேற்று கைப்பற்றினர்.

பாக்., துப்பாக்கிச்சூடு

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டார் பகுதியில், சர்வதேச எல்லை பகுதியில், போர் நிறுத்த விதிகளை மீறி, நேற்று முன்தினம் இரவு முதல், பாக்., ராணுவத்தினர் தொடர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்; இதற்கு, நம் எல்லை பாதுகாப்பு படையினர், பதிலடி கொடுத்தனர்.

செயற்கை ஏரி ஆழம் கணக்கெடுப்பு

புதுடில்லி: உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில், சமீபத்தில் பனிச்சரிவால் ரிஷிகங்கா பகுதியில் செயற்கை உறைபனி ஏரி உருவாகி உள்ளது. இந்த ஏரி உடைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலையில், அதன் ஆழத்தை கணக்கிடும் பணிகளை, விமானப்படையினர் உதவியுடன், கடற்படை வீரர்கள் மேற்கொண்டனர். கடல் மட்டத்தில் இருந்து, 14 ஆயிரம் உயரத்தில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதற்கிடையே, பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 67 ஆக அதிகரித்துள்ளது; 139 பேரை தேடும் பணி தொடர்கிறது.

கரீனாவுக்கு ஆண் குழந்தை

புதுடில்லி: ஹிந்தி நடிகர் சைப் அலிகான், நடிகை கரீனா கபூர், 40, திருமணம், 2012ல் நடந்தது. இவர்களுக்கு தைமூர், 4, என்ற மகன் உள்ளார். மீண்டும் கர்ப்பமாக இருந்த கரீனாவுக்கு, நேற்று மும்பை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X