அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்திற்கு தாமரை, இரட்டை இலை அவசியம்'

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (24+ 22)
Share
Advertisement
சேலம்:''இரட்டை இலையும், தாமரையும் மட்டுமே, தமிழகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்,'' என, சேலத்தில் நடந்த, பா.ஜ., இளைஞர் அணி மாநாட்டில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார்.சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில், பா.ஜ., இளைஞரணி மாநில மாநாடு நடந்தது. இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் தலைமை வகித்தார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியிருந்த
BJP, ADMK, Rajnath Singh, TN election

சேலம்:''இரட்டை இலையும், தாமரையும் மட்டுமே, தமிழகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்,'' என, சேலத்தில் நடந்த, பா.ஜ., இளைஞர் அணி மாநாட்டில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார்.

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில், பா.ஜ., இளைஞரணி மாநில மாநாடு நடந்தது. இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் தலைமை வகித்தார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியிருந்த திடலில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

ராணுவத்துக்கு முன்னுதாரணமாக விளங்கிய ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய மன்னர்கள் வாழ்ந்த பூமியில், ராணுவ அமைச்சராக பேசுவதில் பெருமையடைகிறேன். ஆழ்வார்கள், நாயன்மார்கள், திருக்குறள் தந்த திருவள்ளுவர் வாழ்ந்த பூமி இது.திருக்குறளை வழிகாட்டியாக கொண்டு, மத்திய அரசு எழுச்சியோடு செயல்பட்டு வருகிறது. கொரோனாவால், சுகாதாரம் மட்டுமல்ல, பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.

ஆனாலும், ஒருவர் கூட பட்டினி கிடக்கக்கூடாது என்பதில் கவனமாக செயலாற்றினோம். தற்போது, பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வருகிறது. மூலதனம் அதிக அளவில் வருகிறது. பங்குச்சந்தை வர்த்தகம், ஜல்லிக்கட்டு காளை போல் சீறிப்பாய்ந்து வளர்கிறது.நாட்டில் இரண்டு பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதில் ஒன்று, என் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில், இரண்டாவது, தமிழகத்தில் அதுவும் இந்த சேலத்தில் அமையவுள்ளது. இதற்காக, 8,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்., - தி.மு.க., மக்களுக்கு பாரமான கட்சி. சிறுபான்மையினரை தாஜா செய்வதே அவர்களது கொள்கை. ஊழல், தாஜா ஆகியவற்றால் சமுதாய சீர்கேடு உருவாகும். அனைவருக்கும் நீதி, எவருக்கும் தாஜா செய்தால் அது அநீதி.இதுமாதிரியான இளைஞர் கூட்டத்தை இதுவரை தமிழகத்தில் பார்த்த தில்லை. இரட்டை இலையும், தாமரையும் மட்டுமே, தமிழகத்துக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.

மாநில தலைவர் முருகன் பேசியதாவது:இளைஞர்கள், 100 பேரை கொடுத்தால், இந்த தேசத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். லட்சக்கணக்கான இளைஞர்களால், வலுப்பெற்றுள்ள, பா.ஜ.,வால், மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை, மக்கள் இடையே எழுந்துள்ளது.

ஆற்றல் மிக்க, வளமையான, வல்லமையுடைய தலைவர் மோடி, வழிகாட்ட வேண்டி, புது வாக்காளர்கள், இளைஞர்கள், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். இளைஞர்களால், மாற்றம் வரும். அது, தமிழக அரசியலில், புது தாக்கத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் பேசினார்.பா.ஜ., இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (24+ 22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202113:24:59 IST Report Abuse
Malick Raja பெட்ரோல் டீசல் விலை வளர்ச்சியை சொன்னாலே போதுமே ஓட்டுப்போட வேண்டிய அவசியமே இருக்காது . ராஜ்நாத் சிங் அவர்கள் ஒரு மேதை அதனால் பெட்ரோல் விலை வளர்ச்சியை மக்கள் வரவேற்பார்கள் . வளர்ச்சியில் ஒரு வீழ்ச்சி வரும் என்பதால் தானோ .. வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெறிய மக்கள் விளைவார்கள் .. வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22-பிப்-202122:24:01 IST Report Abuse
Mirthika Sathiamoorthi பிஜேபி : நாங்கள் ஆட்சிக்குவந்தால் கன்னியாகுமாரி குட்டி வள்ளுவர் சிலையை தூக்கிட்டு 200 மீட்டர் புது சிலை கட்டவும் அதில் அவருக்கு பட்டையும் கழுத்தில் கொட்டையும் காவி உடையும் மாட்டுவோம்..அதுமட்டுமா குன்றிருக்கும் இடம் குமரன் இருக்கும் இடம் அந்த குமரனுக்கு ஒரு செயற்கை குன்றை உருவாக்கி அதன்மீது ஒரு மிகப்பெரிய ஆலயம் கட்டுவோம், தெருவுக்கு தெரு ஒரு வேல் நடப்படும், எல்ல பெரியார் சிலையும் தூக்கிட்டு அங்கே விநாயகர் சிலை வைக்கப்படும்..அதுமட்டுமா எல்ல ஏரிகளிலும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு விநயகர்சதுர்த்தியன்று விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும்...எவ்வளவு பெருமை தமிழகத்துக்கு நாங்கள் மட்டும் ஆட்சிக்குவந்தால்..தமிழக வாக்காளன் : அய்யா அந்த பெட்ரோல் டீசல் கேஸ் விலை, குடிதண்ணி பிரச்னை, விவசாய பிரச்னை, காவேரி நீர், முல்லை பெரியாறு அணை பிரச்சனை, முமொழிக்கொள்கை, நீட் பிரச்னை, எட்டு வழி சாலை, ஸ்டெர்லிட், GST இழப்பீடு, புயல் வெல்லம் சேதாரத்துக்கான உதவி, வாழ்வாதாரம் உள்கட்டமைப்பு ரொம்ப மோசமா இருக்கே, ஹைடிரோகார்பன் மீத்தேன் திட்டம், அதிக வேலையிழப்பு, மாநிலங்களுக்கான நிதி பங்கீடு, பொள்ளாச்சி பாலியல் விவகாரம், கல்வி வணிகமாயிட்டு இருக்கு இதெல்லாம்? பிஜேபி : இதெல்லாம் ஒரு பிரச்சனையா? வள்ளுவர் சிலை முக்கியமா இந்த பிரச்னை முக்கியமா? முருகனுக்கு கோவில் கட்டலைன்னா இந்துக்கள் மனசு எப்படி வேதனை படும்? நீ இந்தியனா?... ரொம்ப பேசுறான் ஏதாவது டூல் கிட் வச்சிருப்பான் புடிச்சு உள்ளே போடு..
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் நீரளவே ஆகுமாம் நீராம்பல் தாமரை தண்ணீரில்தான் வாழும் ஆனாலும் தண்ணீர் ஒட்டாது பட்டும் படாமல்தான் இருக்கும் இதுவே தாமரையின் "சிறப்பு"
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-பிப்-202100:04:52 IST Report Abuse
தமிழவேல் ஆனா பாருங்க தாமரை சேத்துலதான் முளைக்கும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X