கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், நிலக்கரிச் சுரங்க மோசடி வழக்கில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,யும், முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனுமான அபிஷேக் பானர்ஜி மனைவி ருஜிராவுக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று, 'நோட்டீஸ்' வழங்கினர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது.இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆளும் கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர், பதவிகளை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.இந்நிலையில், திரிணமுல் கட்சி எம்.பி.,யும், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜிக்கு, நிலக்கரிச் சுரங்க மோசடி வழக்கில் சி.பி.ஐ., 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.
அதன் விவரம் வருமாறு:மேற்கு வங்கத்தில், குனுஸ்டோரியா மற்றும் கஜோரா பகுதி நிலக்கரிச் சுரங்கங்களில் நடந்த முறைகேடு தொடர்பாக, அவற்றின் பொது மேலாளர்கள் உட்பட பல்வேறு நபர்கள் மீது, சி.பி.ஐ., கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது.இந்த வழக்கில், சில நாட்களுக்கு முன் பல்வேறு பகுதிகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அதன் முடிவில், அபிஷேக் பானர்ஜி மனைவி ருஜிராவுக்கும் வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதிய அதிகாரிகள், அதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நேற்று நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.ருஜிராவின் சகோதரிக் கும் நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது.இது குறித்து, அபிஷேக் பானர்ஜி கூறுகையில்,''சி.பி.ஐ., அமைப்பை பயன்படுத்தி, எங்களை அடிபணிய வைக்க முடியாது. இதற்கெல்லாம், நாங்கள் பயப்பட மாட்டோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE