வீட்டுமனை வரன்முறைப்படுத்த அலைக்கழிப்பு :சிறப்பு முகாம் நடத்த எதிர்பார்ப்பு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
உடுமலை:வீட்டுமனை அங்கீகார அனுமதி பெறுவதற்கு, அரசு அவகாசம் வழங்கியும் அதிகாரிகள் அலட்சியத்தால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.தமிழக அரசு, 2016 அக்., மாதத்திற்கு முன் விற்கப்பட்ட தனிமனைகள் மற்றும் வீட்டுமனை பிரிவுகளுக்கு, அங்கீகாரம் வழங்கி வருகிறது.நகர் ஊரமைப்புத்துறையின் அங்கீகாரம் பெற்று, அதற்கான வளர்ச்சிக்கட்டணம் மற்றும் அங்கீகார கட்டணத்தை,

உடுமலை:வீட்டுமனை அங்கீகார அனுமதி பெறுவதற்கு, அரசு அவகாசம் வழங்கியும் அதிகாரிகள் அலட்சியத்தால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.தமிழக அரசு, 2016 அக்., மாதத்திற்கு முன் விற்கப்பட்ட தனிமனைகள் மற்றும் வீட்டுமனை பிரிவுகளுக்கு, அங்கீகாரம் வழங்கி வருகிறது.நகர் ஊரமைப்புத்துறையின் அங்கீகாரம் பெற்று, அதற்கான வளர்ச்சிக்கட்டணம் மற்றும் அங்கீகார கட்டணத்தை, வங்கிக்கணக்கில் செலுத்தியவருக்கு, உரிமம் வழங்கப்படுகிறது.கடந்த, 2016க்கு முன் விற்ற மனைகள் மற்றும் விற்கப்படாத அங்கீகாரமற்ற மனைகளுக்கு, வரும், 28ம் தேதி வரை வரன்முறை செய்ய வாய்ப்பு வழங்கியுள்ளது. கிரய பத்திரம், வரைபடம் மற்றும் ஆன்லைன் வில்லங்கச்சான்று பெற்று, 'ஆன்லைன்' வாயிலாக, 500 ரூபாய் கூர்ந்தாய்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அங்கீகாரம் பெறுவதற்கு, தனியார் மையங்கள், ஒன்றிய அலுவலகம், வளர்ச்சிக்கட்டணம், அங்கீகார கட்டணம் செலுத்த இரு வங்கிகள் என, மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தாலும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், கிராமப்புற மக்கள் மனை வரன்முறை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.ஊராட்சி மக்கள் கட்டணம் செலுத்த, ஒன்றிய அலுவலகம் சென்று, 'சலான்' பெற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற மனைகள், வரன்முறை செய்த மனை விபரம் அனைத்தும், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அலுவலகங்களில், கவனிப்புக்கு ஏற்பவே பணிகள் நடக்கிறது.பொதுமக்கள் கூறுகையில், 'அரசு நிர்ணயித்துள்ள, கட்டணம் மற்றும் அபராதத்துடன், வங்கிக்கணக்கில் பணம் செலுத்த தயாராக இருந்தாலும், ஊராட்சி மன்ற அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வங்கிகளுக்கு என செல்ல வேண்டியுள்ளது. எனவே, இம்முறையை எளிமைப்படுத்தவும், அவகாசம் முடிய குறுகிய நாட்களே உள்ளதால், சிறப்பு முகாம்கள் நடத்தவும், ஒரே இடத்தில் அனைத்து பணிகளையும் முடிக்கும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X